சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
செல்லாத அல்லது செயல்படாத FASTag வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
Posted On:
17 MAY 2020 2:08PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணங்கள் நிர்ணயித்தல் மற்றும் வசூல்) விதிகள் 2008இல் திருத்தம் செய்து 2020 மே 15 தேதியிட்ட அறிவிக்கை GSR 298 E-ஐ வெளியிட்டுள்ளது. FASTag ஒட்டாத அல்லது செல்லத்தகுந்த FASTag இல்லாத அல்லது செயல்பாட்டு நிலையில் இல்லாத FASTag இருந்து, சுங்கம் செலுத்த வேண்டிய சாவடிகளில் `FASTag' வாகனங்களுக்கான பாதையில் நுழைந்தால், அந்த வாகனத்திற்கான இயல்பு கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் FASTag இல்லாத வாகனங்களுக்கு மட்டும், FASTag பாதையில் நுழைந்தால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
(Release ID: 1624724)
Visitor Counter : 276
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam