பாதுகாப்பு அமைச்சகம்

ரூ. 400 கோடியில் பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 15 MAY 2020 6:30PM by PIB Chennai

உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் விமான உற்பத்திக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில், ரூ. 400 கோடியில் பாதுகாப்பு சோதனை கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, உயர் தரமான சோதனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இதன்படி தனியார் பங்களிப்புடன் ஆறு முதல் எட்டு வகையான சோதனை வசதிகள் செயல்படுத்தப்படும். இத்திட்டம் உள்நாட்டிலேயே ராணுவப் பாதுகாப்பு சோதனை முறைக்கு வழியமைக்கும். அதன் பலனாக ராணுவ உதிரி பாகங்களை இறக்குமதி குறையும். நாடு முழுக்க தற்சார்புடன் திகழும்.

பாதுகாப்பு சோதனை கட்டமைப்புத் திட்டத்தின்  வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரம் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.

விவரம்: https://ddpmod.gov.in/sites/default/files/pdfupload/DTIS%20Guidelines.pdf


(रिलीज़ आईडी: 1624451) आगंतुक पटल : 333
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Odia , Telugu