கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

திரு. மன்சுக் மண்டவியா கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக ”ஆத்மனிர்பர் பாரத் அபியான்” கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்கிறார்.

Posted On: 15 MAY 2020 7:14PM by PIB Chennai

மாண்புமிகு பாரதப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களை, கப்பல் மற்றும் ரசாயன உரங்களுக்கான  அமைச்சர் (பொறுப்பு) திரு. மன்சுக் மண்டவியா வரவேற்றுள்ளார். திரு. நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 20 இலட்சம் கோடி ரூபாய்க்கு விரிவான சிறப்புப் பொருளாதார திட்டங்களை அறிவித்தார். அவர் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு ஒரு தெளிவான அழைப்பு விடுத்தார். ஆத்மனிர்பர் பாரத்தின் ஐந்து தூண்களான பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள்தொகை மற்றும் தேவை ஆகியவற்றை அவர் கோடிட்டுக் காட்டினார்.

 

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்தியப் பொருளாதாரத்தையும் அதன் குடிமக்களையும் மேம்படுத்துவதில் நிதியமைச்சர் இதுவரை மூன்று தவணைகளில் அறிவித்த விவரங்கள் தொலைநோக்குப் பார்வையுடவை என்றும் திரு மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 

****************



(Release ID: 1624365) Visitor Counter : 130