பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

வடகிழக்கு மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தில்லி அலுவலக ஆணையர்களிடம் கோவிட் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்தார் அமைச்சர் ஜிதேந்திர சிங்

Posted On: 15 MAY 2020 7:38PM by PIB Chennai

எட்டு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தில்லி அலுவலக ஆணையர்களிடம் இருந்து கோவிட் தொடர்பான தகவல்களை  மத்திய அமைச்சர் டாக்டர்  ஜிதேந்திர சிங் இன்று கேட்டறிந்தார்.

காணொலி மூலம் ஒரு மணி நேரம் நடந்த இந்த உரையாடலில், தில்லி அலுவலக ஆணையாளர்களாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் சார்பில் ஜிதேந்திர நராயண், அசாம் சார்பில் கே.சி. சமாரியா, மணிப்பூர் சார்பில் பி.கே. சிங், மிசோரம் சார்பில் அஜய் சௌத்ரி, நாகாலாந்து சார்பில் ஜோதிகலாஷ், சிக்கிம் சார்பில் அஸ்வனி குமார் சந்த், திரிபுரா சார்பில் சேட்டன்ய மூர்த்தி, ஜம்மு காஷ்மீர் சார்பில் நீரஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு தகவல்களைத் தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளிடம் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், டெல்லி அலுவலக ஆணையாளர்களின் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களில் பலர் இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு முன்னோடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுடைய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அல்லது மருத்துவ சாதனங்களுக்குப் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அமைச்சரிடம் ஆணையாளர்கள் கூறினர்



(Release ID: 1624358) Visitor Counter : 145