சுற்றுலா அமைச்சகம்

’ நம் நாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ தொடரின் கீழ், மைசூரு; கர்நாடகத்தின் கைவினைக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் நூற்றாண்டுகள் பழமையான மைசூரின் கைவினைக் கலையை சுற்றுலா அமைச்சகம் இணையதளக் காட்சியில் கொண்டுவந்துள்ளது.

Posted On: 15 MAY 2020 1:02PM by PIB Chennai

இந்தியாவின் செழுமையான கைவினைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றை அணுகுவதற்கான வழியையும், அனுபவத்தையும் ஏற்படுத்தும் விதத்திலும், நம் நாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள் இணையதளக் காட்சியில் ‘ மைசூரு; கர்நாடகத்தின் கைவினை மையம்’ என்னும் தலைப்பில் சுற்றுலா அமைச்சகம் காட்சிப்படுத்தியுள்ளது. சென்னபட்னா பொம்மைகள், செம்மரக் கைவினை வேலைப்பாடு போன்ற நூற்றாண்டுகள் பழமையான கைவினைக் கலையை மைசூரு நகரத்தைச் சுற்றிலும் காணலாம்.

நம்நாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள் இணையதளக் காட்சித்தொடரின் 19-வது அமர்வை மே 14-ஆம் தேதி, பெங்களூரு தேசிய வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திருமிகு. சூசன் தாமஸ், அதன் கல்விப்புலத்தைச் சேர்ந்த டாக்டர் யத்தீந்திர லக்கன்னா, திருமிகு. ஷில்பா ராவ் ஆகியோர் வழங்கினர். இந்தியாவின் தறிகள் மற்றும் கைவினைக் கலையின் செழுமையை விளக்கிய அவர்கள், கைவினை சுற்றுலாவுக்கான மாற்று விவரணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும், உள்நாட்டுக் கைவினைக் கலைக்கு சுற்றுலா வரைபடத்தில் ஒரு இடம் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மைசூருக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு கைவினைக் கலைகளைப் பராமரித்து செழுமைப்படுத்தி வரும் கைவினைக் கலைஞர்களின் ஊர்கள் மற்றும் நகரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளை இது வழங்குவதாக அமைந்திருந்தது.

இந்த வலைதளத் தொடரின் அமர்வுகள் தற்போது, https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற இணையதளத்திலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகங்களிலும் காணக்கிடைக்கும்.

அடுத்த இணையதளக் காட்சித் தொடர் ‘ உத்தரகாண்ட்; உண்மையிலேயே சொர்க்கம் ’ என்ற தலைப்பில் மே 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.  அதற்கு இங்கே பதிவு செய்யுங்கள் https://bit.ly/UttarakhandDAD



(Release ID: 1624069) Visitor Counter : 201