ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே 12.05.2020 முதல் அறிமுகப்படுத்தப்படும் சிறப்பு ரயில்களில் வெவ்வேறு வகுப்புகளுக்கான வரையறுக்கப்பட்ட காத்திருப்போர் பட்டியலுக்கு டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்கும்.

Posted On: 14 MAY 2020 4:40PM by PIB Chennai

சிறப்பு ரயில்களில் RAC (ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்குப் பதிலாகடங்கள் ஒதுக்கீடு) இருக்காது என்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இது 12.05.2020 லிருந்து அமலுக்கு வருகிறது.. மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச வரம்புகளுக்கு உட்பட்டு காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது:

 

Class

Maximum Waiting List Limit

1 AC

20

Executive Class

20

2 AC

50

3 AC

100

AC Chair Car

100

(Applicable only if any train with Chair Car class is introduced in future)

Sleeper

200

(Applicable only if any train with Sleeper class is introduced in future)

 

12.05.2020 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பாக இந்திய ரயில்வே வேறு சில முடிவுகளையும் எடுத்துள்ளது. அவை வருமாறு:

  • காத்திருப்புப் பட்டியல் தொடர்பான பிற விதிகள் பொருந்தும்.

 

  • எந்த வித (தட்கல்) / பிரீமியம் தட்கல் ஒதுக்கீடுகள் வரையறுக்கப்படாது.

 

  • மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு ஆகியவை தற்போதுள்ள அறிவுறுத்தல்களின்படி வரையறுக்கப்படும்.

 

  • ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன் ரத்து செய்தால் 50 சதவீதக் கட்டணம் திரும்பத் தரப்படும். அதன் பின்னர் என்றால் கட்டணத்தொகை திரும்பத் தரப்படமாட்டாது என்பணத்தைத் திரும்பப்பெறும் விதிகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக 2015 ரயில்வே ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் விதி அமலில் இருக்கும்.

 

  • மேற்கண்ட மாற்றங்கள் மே 22, 2020 முதல் தொடங்கும் ரயில்களுக்குப் பொருந்தும், அதாவது மே 15, 2020 முதல் முன்பதிவு செய்யப்படுவதில் இருந்து தொடங்கும்.


************


(Release ID: 1623852) Visitor Counter : 216