குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உள்ளூர் பொருள்களுக்கு கைகொடுக்க முன்வந்தது காதி, கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையம்
Posted On:
13 MAY 2020 6:50PM by PIB Chennai
உள்ளூர் பொருள்களுக்காக குரல் கொடுத்து, அதனை சர்வதேசப் பொருளாக மாற்றுமாறு பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த அழைப்பை வலுப்படுத்த காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையம் முன் வந்துள்ளது. உள்ளூர்ப் பொருள்களை ஊக்குவிக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்ததற்கு அடுத்த நாளே, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் (PMEGP) அமல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து வங்கிகளுக்கு அனுப்புமாறு உரிய அதிகாரிகளுக்கு காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையத்தின் தலைவர் திரு.வினய்குமார் சக்சேனா அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம், 26 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த காலக்கெடுவை 15 நாட்களாக குறைக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். விண்ணப்பதாரர்களுக்குத் திட்டங்களை வடிவமைத்து, கடன் அனுமதி கிடைக்கும் வரை செயல்படுத்தும் அமைப்புகள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, கைகொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. கடன்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவதற்காக வங்கிகளின் நடவடிக்கைகளை அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கும்.
திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மும்பையில் உள்ள காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையத்தின் கண்காணிப்புப்பிரிவு, விண்ணப்பங்களின் நடவடிக்கைகளை தினசரி கண்காணிக்கும். செயல்படுத்தும் அமைப்புகளுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பின்னூட்டக் கருத்துக்களைத் தெரிவிக்கும். அதற்குப் பிறகு, முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை, காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனங்கள் ஆணையத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் பார்வைக்கு வைக்கப்படும்.
(Release ID: 1623799)