ஜல்சக்தி அமைச்சகம்

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் டிசம்பர் 2022க்குள் குழாய் தொடர்பு வசதிகளை அளிக்க உள்ளது ஹரியானா.

Posted On: 13 MAY 2020 1:16PM by PIB Chennai

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராமப்புற இல்லங்களுக்கும் குழாய் நீர்த்தொடர்பு வசதிகளை ஹரியானா மாநிலம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. இம்மாநிலம், ஜல் ஜீவன் மிஷன் (ஜே ஜே எம்) திட்டத்தின் கீழ், 2019- 20ஆம் ஆண்டில்1.05 லட்சம் குழாய்த் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அனைத்து கிராமப்புற இல்லங்களுக்கும் 100 சதவீதத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது என்பதை 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்பதே தேசிய இலக்காகும். இந்த இலக்குக்கு முன்னதாகவே, டிசம்பர் 2022 லேயே 100 சதவீதம் தொடர்பு அளித்துவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர்க் குழாய்த் தொடர்பு அளிக்கவேண்டும் என்ற இலக்கைப் பூர்த்தி செய்த முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக ரியானா விளங்கும்.

 

 

ஜே ஜே எம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர்க் குழாய்த் தொடர்பு அளிக்கவேண்டும் என்ற இலக்கை அடைவது பற்றி குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை தனது செயல்திட்டத்தை நேற்று விக்கியது. ரியானாவில் 28.94 லட்சம் இல்லங்கள் உள்ளன என்றும், இதில் 18.83 லட்சம் இல்லங்களுக்கு, இல்லங்களில் செயல்படும் குழாய்த் தொடர்பு (Functional Household Tap Connection - FHTC), ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 10.11 லட்சம் இல்லங்களில், ஏழு இலட்சம் இல்லங்களுக்கு  2020- 21ஆம் ஆண்டிலேயே குடிநீர்க் குழாய்த் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து விட ஹரியானா திட்டமிட்டுள்ளது.

 

நடப்பாண்டில் ஒரு மாவட்டத்தில் முழுமையாக இத்திட்டத்தைச் செயல்படுத்தவும், மொத்தமுள்ள 6987 கிராமங்களில் 2898 கிராமங்களுக்கு குடிநீர்க் குழாய் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும், மாநில அரசு திட்டமிட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளிலுள்ள கிராமப்புற உள்ளங்களுக்கும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும் குடிநீர்க் குழாய்த் தொடர்பு வசதி ஏற்படுத்தித் தருவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜே ஜே எம் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் பங்காக மாநிலத்திற்கு 290 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையுடன் மாநில அரசு, தனது பங்காக அதே அளவு தொகையை இத்திட்டத்திற்கு அளிக்கும். மாநிலத்தில் இத்திட்டத்தின் செயல்திறன், நிதித்திறன் அடிப்படையில் கூடுதல் ஒதுக்கீடு பெற மாநிலம் தகுதி பெற்றுள்ளது


(Release ID: 1623520)