குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தொழில் மையங்கள் தற்போது நிகழ்நேர அளவீட்டு மைக்ரோ பிசிஆர் சிஸ்டத்தின் முக்கியமான பாகங்களைத் தயாரித்து வருகின்றன.
Posted On:
11 MAY 2020 6:13PM by PIB Chennai
மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு உட்பட்ட புவனேஷ்வர், ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா தொழில்நுட்ப மையங்கள், நிகழ்நேர அளவீட்டு மைக்ரோ பிசிஆர் சிஸ்டத்தின் முக்கிய பாகங்களை விசாகப்பட்டினம் ஏஎம்டிஇசட் (AMTZ, Vishakhapatnam) அமைப்பிற்காகத் தயாரித்து வருகிறது. இந்த இயந்திரங்கள் ஒருமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் (வழக்கமான சோதனைகள் 24 மணி நேரமாகும்) கோவிட் - 19 பரிசோதனை முடிவுகளை அளிக்கும். இதை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரங்கள் கையடக்கமானவை. இதை சோதனைக்காக எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நிகழ்நேரத்தில் கொண்டு செல்ல முடியும். தொழில்நுட்ப மையங்களின் குழுவினர், 600 சோதனை இயந்திரங்களுக்கான பாகங்களைத் தயாரித்துக் கொடுப்பதற்காக 2/3 ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். ஏற்கனவே ஏஎம்டிஇசட்டுக்கு 150 சோதனை இயந்திரங்களுக்கான பாகங்கள் தயாரித்து அளிக்கப்பட்டுள்ளன. எஃகுவினால் தயாரிக்கப்பட்ட இந்த பாகங்கள், உலகத்தில் மிகச்சிறந்த இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் 5 மைக்ரான் அளவிலான துல்லியமான எஃகினால் ஆனவை.
மிகக் குறைந்த கட்டணத்தில் கொரோனா சோதனையை மேற்கொள்ள இந்த சோதனைக் கருவி உதவிகரமாக இருக்கும். மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவன அமைச்சகத்திற்கு உட்பட்ட புவனேஷ்வர், ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா தொழில்நுட்ப மையங்களின் சீரிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினால் இந்த இயந்திரங்களின் தயாரிப்பு சாத்தியமானது.
(Release ID: 1623274)
Visitor Counter : 223