வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
கோவிட்-19 நிலைமை சரியான பிறகு பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இதர துறைகளில் புதிய பரிமாணங்கள் ஏற்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
11 MAY 2020 8:14PM by PIB Chennai
வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், கோவிட்-19 நிலைமை சரியான பிறகு பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல வேறுபட்ட துறைகளில் புதிய திருப்புமுனைகள் ஏற்படுவதற்கான திறன் உள்ள முன்னுதாரணமாக திகழக்கூடிய, புதிய பரிமாணங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அசோசெம் (ASSOCHAM Associated Chamber of Commerce and Industries) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்திய - பங்களாதேஷ் மெய்நிகர் மாநாட்டில் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த காலவிரயங்களிலிருந்து வடகிழக்கு மண்டலம் கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டுள்ளது என்றும், நாட்டின் மற்ற மண்டலங்களைப் போல வடகிழக்கு மண்டலமும் முதன்முறையாக சம அளவிலான கவனம் பெற்றுள்ளது என்றும் கூறினார்
பங்களாதேஷைப் பொறுத்தவரை இந்திய - பங்களாதேஷ் எல்லை இடப்பரிமாற்ற ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் எளிமையாக நடைபெறுவதிலிருந்த தடைகளை நீக்கியுள்ளது என்றும், முன்னதாக மிகக் கடினமானதாக இருந்த, இரு நாடுகளுக்கிடையேயான நடமாட்டத்தையும், போக்குவரத்தையும் இது எளிதாக்கியுள்ளது என்றும் கூறினார்.
![https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001T2SD.jpg](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001T2SD.jpg)
இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பாரம்பரியமான நட்புறவுகள் பற்றிக் குறிப்பிட்ட டாக்டர். ஜிதேந்திர சிங் மற்ற பல நாடுகளைக் காட்டிலும் பங்களாதேஷுடன் வர்த்தகம் செய்வது மிகவும் எளிது என்றார். இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்த வடகிழக்கு மண்டலம் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
(Release ID: 1623270)
Visitor Counter : 209