அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தடுப்பு மருந்துகள், நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகளைக் கொண்ட 70 கருத்துருக்களுக்கு கோவிட்-19 ஆராய்ச்சி கூட்டமைப்பு பரிந்துரை
Posted On:
10 MAY 2020 7:47PM by PIB Chennai
சார்ஸ் கோவ்-2 தொற்றுக்கு எதிராக செயல்திறன் மிக்க பாதுகாப்பான உயிரிமருத்துவத் தீர்வுகளை அவசரமாக உருவாக்குவதற்காக, உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி குழுமம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளன. இதுதவிர, ‘துரித வழி ஆய்வு நடைமுறை’யின் கீழ், உடனடி செயலாக்கத்துக்கான கோவிட்-19 தொற்று தீர்வுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான வழியையும் அது உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி கூட்டமைபின் கீழ், உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி குழுமம் ஆகியவை, கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும், நோய் கண்டறிதல், தடுப்பு மருந்துகள், நவீன சிகிச்சை முறைகள், மறு நோக்க மருந்துகள் அல்லது இதர கண்டுபிடிப்புகளை உருவாக்க தொழில் துறை, கல்வித்துறை மற்றும் இரண்டும் இணைந்த நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கத்துடன் தொடர்ந்து விண்ணப்பங்களை மதிப்பிட்டு வருகின்றன. சுழற்சி பல அடுக்கு ஆய்வு முறையின் மூலமாக, உபகரணங்கள், நோய் கண்டறிதல், தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகளுக்கான 70 கருத்துருக்கள் நிதி உதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் 10 தடுப்பு மருந்து விண்ணப்பங்கள், 34 நோய் கண்டறியும் முறைகள் அல்லது வசதிகள், 10 சிகிச்சை முறைகள், மறுநோக்க மருந்து முறைகள் 2, தடுப்பு நடவடிக்கைகள் என வரையறுக்கப்பட்டுள்ள 14 திட்டங்கள் உள்ளிட்ட கருத்துருக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உயிரி தொழில்நுட்பத் துறை, பொதுத்துறை மற்றும் தனியார் பங்கேற்பில் தேசிய உயிரி மருத்துவ உள்நாட்டு ஆதார கூட்டமைப்பு ஒன்றைத் துவக்கியுள்ளது. கோவிட்-19 தொற்று கண்டறிதல், தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆதாரங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டிருக்கும். ஏபிள் மற்றும், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்புக்கு சி- கேம்ப் நிதி அளிக்கும்.
தனது ‘துரித வழி ஆய்வு நடைமுறை’யின் கீழ், உடனடி செயலாக் கத்துக்கான கோவிட்-19 தொற்று தீர்வுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான வழியை BIRAC உருவாக்கியுள்ளது
****
(Release ID: 1623008)
Visitor Counter : 789