சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகத்தின் ‘’நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்’’ தொடரில் ‘ நிலா நதியை ஆராய்வோம்’ என்ற பெயரில் 17-வது இணையதள காட்சி

Posted On: 10 MAY 2020 7:55PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள் இணையதள காட்சி தொடரில் மே 9 ம் தேதி அன்று    ‘நிலா நதியை ஆராய்வோம் என்ற தலைப்பில், இதுவரை சென்று பார்த்திராத இடங்கள் தொடர்பான அர்த்தமுள்ள பயண அனுபவங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துக்காட்டியது.

இணையதளக் காட்சியில் பங்கேற்றவர்கள், கேராளாவின் பரதப்புழா என்று அழைக்கப்படும் நிலா நதி தீரத்தில் அமைந்துள்ள, குறைந்த அளவில் பிரபலமான நகரங்கள், கிராமங்களுக்கு இந்தப்பயணக் காட்சியின் வழியே அழைத்துச் செல்லப்பட்டனர். விவேகமான பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அதிகாரபூர்வமான, தனித்துவமான அனுபவத்தை இது அளித்தது

நிலா நதியை ஆராய்வோம்காட்சியுரை, தனித்துவமான இடங்கள், அவற்றில் வசிக்கும் மக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொறுப்பான சுற்றுலா கொள்கைகளை அங்கு பயணிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதே, நம் நாட்டைப் தெரிந்து கொள்ளுங்கள் இணையதளக் காட்சி தொடரின் நோக்கமாகும்.

இந்த இணையதளத் தொடரின் அமர்வுகள் தற்போது, https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற வலைதளத்திலும், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகங்களிலும் காணக் கிடைக்கும்.

அடுத்த இணையதளக் காட்சித் தொடர் ஒடிசா; இந்தியாவின் சிறந்த ரகசியம்என்ற தலைப்பில் மே 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கு இங்கே பதிவு செய்யுங்கள் https://bit.ly/OdishaDAD


(Release ID: 1623007) Visitor Counter : 252