வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் பொது முடக்க கால கடவுச்சீட்டுகள் ஒருங்கிணைந்த அதிகாரக் கட்டுப்பாட்டு மையம், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை டேராடூன் ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) செயல்படுத்தியுள்ளது

Posted On: 11 MAY 2020 1:32PM by PIB Chennai

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு கண்காணிப்பு மற்றும் கடும் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக, ஒருங்கிணைந்த அதிகார மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை, டேராடூன் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (DSCL) பயன்படுத்தியுள்ளது. கோவிட்-19 நோய் தொடர்பான தேவைகளுக்கான திட்டமிடுதல் மற்றும் மேலாண்மைக்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து DSCL அதிகாரிகள் பணியாற்றினர். திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, செயல்படுத்துவது ஆகியவற்றுக்காக HPE, SGL மற்றும்  Webline போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தொலைவுப் பணிகளில் பணியமர்த்தப்பட்டன. இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதை, மாவட்ட நிர்வாகம் மற்றும் DSCL, காணொளி மற்றும் தொலைபேசி மாநாடு மூலமாக, உறுதி செய்தன.

 

டேராடூன் ஒருங்கிணைந்த அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் ( Integrated Command and Control Centre -

 ICCC) மூலமாக, மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளைக் கண்காணிக்கும் முறை ஒன்றை டேராடூன் ஸ்மார்ட் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அவர்களைக் கவனிக்கின்ற சேவை ஆற்றுபவர்களும், பாதுகாப்புடனும் நலமுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு கேமராக்கள் சிசிடிவி கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

அத்தியாவசிய தேவைக்கான பொது முடக்கக் கடவுச்சீட்டு என்ற கணிப்பொறி விண்ணப்பத்தையும், டேராடூன் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கியுள்ளது. பொது முடக்கக் காலத்தின் போது அவசரத்தேவை ஏற்பட நேரிட்டால் குடிமக்கள் இந்தக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து, அனுமதி கிடைத்தவுடன் தங்களது வீடுகளிலிருந்து புறப்பட்டு மாவட்ட அளவிலான/ நகர அளவிலான அவசரத்தேவை /அத்தியாவசியத் தேவை ஆகியவற்றை பயன்படுத்தலாம். மூத்த குடிமக்களுக்கான அவசர /அத்தியாவசிய தேவை, இறுதிச் சடங்குகள், மருத்துவச்சேவை, உணவு வழங்குதல் உணவுப் பொருள்கள் /மளிகைப் பொருள்கள் வழங்குதல்,ல்லங்களுக்கு வந்து வழங்குதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புச் சேவை போன்ற சேவைகளைப் பெறலாம்.

 

பொது முடக்கம் பற்றியும் முனிசிபல் மாநகராட்சியால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், இதர அனைத்து அரசு சேவைகள் குறித்தும் டேராடூன் ஸ்மார்ட்சிட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.



(Release ID: 1622983) Visitor Counter : 215