நிதி அமைச்சகம்

வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 6 ன் கீழ் வசிப்பிடம் தொடர்பான விளக்கம்

Posted On: 09 MAY 2020 10:39AM by PIB Chennai

வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவுதனி நபரின் வசிப்பிடம் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளது. தனி நபர் இந்தியாவில் குடியிருப்பவரா அல்லது இங்கு வசிக்காதவரா அல்லது சாதாரணமானக் குடிமகன் இல்லையா என்பது அந்த நபர் ஒரு வருடத்தில் இந்தியாவில் வசிக்கும் காலம், மற்றும் இதர விஷயங்களை, பொறுத்தது.

முந்தைய வருடமான 20019-20 இல், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கிவிட்டு, வருடம் முடிவதற்குள் இந்தியாவிலிருந்து வெளியே சென்று, தாங்கள் வெளிநாட்டில் வசிப்பவர் அல்லது சாதாரண இந்தியக் குடிமகன் இல்லை எனும் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவுக்கு வந்த பல்வேறு நபர்கள் விரும்பியதாகவும், ஆனால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெரும் பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்தியாவில் தாங்கள் தங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு அந்த எண்ணம் இல்லாத போதும் கட்டாயமாக தாங்கள் இந்திய குடிமக்களாக ஆகி விடுவோமோ என்று கவலைத் தெரிவித்தனர்.

இப்படிப்பட்டவர்களின் நியாயமான வருத்தத்தைக் களைய, மத்திய நேரடி வரிகள் வாரியம் மே 8 ம் தேதியிட்ட, சுற்றறிக்கை எண் 11 மூலம் கீழ்கண்டவாறு முடிவெடுத்தது.  சட்டத்தின் ஆறாம் பிரிவின் கீழ் முந்தைய வருடமான 2019-20ல் ஒருவர் இந்தியாவுக்கு  மார்ச், 22 தேதிக்கு முன் வந்திருந்தாலோ, மற்றும்:

* இந்தியாவிலிருந்து  மார்ச் 31க்கு முன் செல்ல முடியாமல் இருந்திருந்தாலோ,  இந்தியாவில் அவரது  தங்கும் காலம் மார்ச், 22  முதல் 31 வரை  கணக்கில் எடுத்துக்  கொள்ளப்பட மாட்டாது; அல்லது

*   கொரோனா வைரஸ் (கொவிட்-19) காரணமாக  மார்ச், 1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்து, மார்ச் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பு சிறப்பு விமானம் மூலம் வெளியேறி இருந்தாலோ,  அல்லதுமார்ச், 31 ம் தேதிக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர் வெளியேறும் தேதி அல்லது  மார்ச், 31 வரை எது பொருந்துமோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, அல்லது;

* மார்ச் 31, அல்லது அதற்கு முன்பு சிறப்பு விமானம் மூலம் ஒருவர் வெளியேறி இருந்தால், மார்ச், 22 முதல் அவர் வெளியேறியது வரை இந்தியாவில் அவர் தங்கியிருந்த காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும், நிதியாண்டு 2020-21லும் பொது முடக்கம் தொடர்ந்துக் கொண்டிருப்பதாலும், சர்வதேச விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெளிவாக தெரியாததாலும், இவர்களது வசிப்பு நிலையை 2020-21க்கு முடிவு செய்வதற்கான காலத்தை சர்வதேச விமான சேவைகள் சகஜம் ஆகும் வரை நீட்டிக்கும் சுற்றறிக்கை இயல்பு நிலை வந்தவுடன் வெளியிடப்படும்.(Release ID: 1622452) Visitor Counter : 36