தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக தொழில் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தணிக்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

Posted On: 08 MAY 2020 8:08PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றிலிருந்து எழும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரம் மீதான அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான உத்திகள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமூக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  மே 1 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சகம் ஏற்கனவே இணைய மாநாடு ஒன்றை நடத்தியது.

மற்றொரு இணைய மாநாடு, மே 6 ம் தேதி அன்று மத்திய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தனியாக நடைபெற்றது. இந்த செயல்முறையின் தொடர்ச்சியாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்வார், இன்று புதுதில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து, தொழிலதிபர் அமைப்புகளுடன் ஒரு இணைய மாநாடு நடத்தினார். இணைய மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டவை பின் வருமாறு (i) கோவிட்-19 இன் பார்வையில் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பாதுகாத்தல், (ii) வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், (iii) பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் (iv) தொழிலாளர் சட்டங்களின் கீழ் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றனர்.

இணைய மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், கோவிட்-19 தொற்றின் போது தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தணிக்க, இஎஸ்ஐசி மற்றும் இ பி எஃப் இன் விதிமுறைகளில் தளர்வு, நாடு முழுவதும் கட்டுப்பாட்டு மையங்கள் / ஹெல்ப்லைன்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.


(Release ID: 1622431)