பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கப்பற்படை பணியாளர் உடல் பாதுகாப்பு கருவிகளுக்கு, ஐ என் எம் ஏ எஸ்- ன் (அணு மருந்தியல் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம்) சான்றிதழுக்கு அனுமதி

Posted On: 07 MAY 2020 7:39PM by PIB Chennai

கப்பற்படை வடிவமைத்து தயாரித்துள்ள பணியாளர் உடற் பாதுகாப்பு கருவிகளை, தில்லியில் உள்ள   என் எம் ஏ எஸ் (அணு  மருந்தியல்  மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம்) எனப்படும் டிஆர்டிஓ -வைச்ச சேர்ந்த பணியாளர் உடற்பாதுகாப்பு கருவிகளை சோதனை செய்து சான்றளிக்கும் பொறுப்புடைய அமைப்பு, சோதனை செய்து பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கும், கோவிட் சூழலில் மருத்துவப் பணிகள் மேற்கொள்ளவும் ஏற்றவை எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், பணியாளர் உடற்பாதுகாப்பு கருவிகள் குறைபாடு மிகவும் கவலை அளிப்பதாகும்.  சுகாதாரப் பணியாளர்கள் கிடைப்பது, அவர்களது உடல் நலம் பாதுகாப்பது, அவர்களது மன பலம் பேணுவது ஆகியவை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது.


பணியாளர் உடற் பாதுகாப்பு கருவிகள் சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மற்றும் சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம் ஆகியன மிக உயர்ந்த தரங்களை நிர்ணயித்துள்ளன.



கோவிட்டுக்கு  எதிரான போரில் மிக முக்கியமான ஆதாரத்தை கிடைக்கச் செய்யும் பிரச்சினையில் இந்தியக் கப்பற்படை சவாலை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. மும்பையில் உள்ள கப்பற்படை மருத்துவ நிறுவனத்தின் புதுமைப் படைப்பு பிரிவு மற்றும் மும்பை கப்பற்படை கப்பல் நிறுத்தகம் ஆகியவற்றின் குழு இந்த பணியாளர் உடற் பாதுகாப்பு கருவிகளை வடிவமைத்து தயாரித்துள்ளது. இவற்றை தில்லியில் உள்ள என் எம் ஏ எஸ் (அணு
மருந்தியல் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம்) எனப்படும் டிஆர்டிஓ-வைச் சேர்ந்த பணியாளர் உடற் பாதுகாப்பு கருவிகளை சோதனை செய்து சான்றளிக்கும் பொறுப்பு கொண்ட அமைப்பு, பரிசோதித்தது.

இந்தப் பணியாளர் உடற் பாதுகாப்பு கருவிகளின் விலை வர்த்தக ரீதியில் கிடைக்கும் கருவிகளின் விலையைவிடக் குறைவாக இருக்கும்.

 



(Release ID: 1622166) Visitor Counter : 198