சுற்றுலா அமைச்சகம்

‘’நம் நாட்டைப் பாருங்கள்’’ தொடரில் ‘ கோவா- கலாச்சாரத்தின் சிலுவை’ என்ற பெயரில் 16-வது இணையதளக் காட்சிக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு.

Posted On: 08 MAY 2020 3:39PM by PIB Chennai

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் “நமது நாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள்” எனும் இணையதளக் காட்சித் தொடரில் மே 7,2020 அன்று ‘ கோவா - கலாச்சாரத்தின் சிலுவை’  என்ற தலைப்பில், ‘குறைந்த அளவே தெரிந்த’ அல்லது ‘தெரியாத’, பயண அனுபவங்களை வழங்கியது. இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான ‘கோவா’, கண்டுபிடிக்கக் காத்திருக்கும், இதுவரை வெளியே தெரியாத அழகான இடத்தை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் காண்பதற்காக வழங்கவுள்ளது.

எழுத்தாளரும், புகைப்படக்கலைஞரும், பண்டிகை ஏற்பாட்டாளருமான விவேக் மெனிசஸ் வழங்கிய இணையதளக்காட்சி, கோவாவின் செழுமையைப் பறைசாற்றியது. புகழ்பெற்ற கடற்கரைகள், இரவு வாழ்க்கைக்கு அப்பால், பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரப் பரிமாற்றம், படைப்பாற்றல் ஆகியவற்றை கோவா தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, கோவா கலைகள், இலக்கிய விழா, செரன்டிபிட்டி கலை விழா, உள்ளூர் விழாக்கள், இசை, உணவு, கட்டிடக்கலை, ஓவியம் ஆகியவை அந்தக் காட்சியில் இடம் பெற்றன.

இந்த வலைதளத் தொடரின் அமர்வுகள் தற்போது, https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற இணையதளத்திலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் incredibleindia.org, tourism.gov. in ஆகிய வலைதளங்களிலும் காணக் கிடைக்கும்.

அடுத்த இணையதளக் காட்சித் தொடர் ‘நிலா நதியை ஆராய்வோம்’ என்ற தலைப்பில் மே 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.  அதற்கு இங்கே பதிவு செய்யுங்கள் https://bit.ly/RiverNila



(Release ID: 1622154) Visitor Counter : 147