கலாசாரத்துறை அமைச்சகம்
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 159ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நவீன கலைகளுக்கான தேசிய காட்சிக்கூடம் இன்று மெய்நிகர் சுற்றுலாவை நடத்துகிறது
Posted On:
06 MAY 2020 8:42PM by PIB Chennai
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 159ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நவீன கலைகளுக்கான தேசிய காட்சிக்கூடம் இன்று முதல் ”குருதேவ் – புகழ்வாய்ந்த கலைஞரின் காட்சித் தொகுப்புகளின் ஊடே ஒரு பயணம்” என்ற தலைப்பிலான ஒரு மெய்நிகர் சுற்றுலாவை இன்று முதல் நடத்தகிறது. என்.ஜி.எம்.ஏ ஈடுஇணையற்ற கலைஞர் உருவாக்கிய 102 கலைப்பொருட்களை தன்னிடத்தில் வைத்திருக்கிறது. இந்தக் காட்சிப் பொருட்கள் தாகூர் காட்சி மொழிக்கு அளித்துள்ள விலை மதிப்பில்லாத பங்களிப்பாக உள்ளன. என்.ஜி.எம்.ஏ தனது சேமிப்பில் வைத்துள்ள ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற கலைப்பொருட்களில் உள்ள கலைத்தன்மையை இந்த மெய்நிகர் சுற்றுலாவானது எடுத்துக் காட்டும். தாகூருடைய காட்சி அமைப்பின்படி உருவப் படங்கள் தலைப்பகுதி ஆய்வு, மனிதன் மற்றும் மயக்கும் இயற்கை ஆகிய மையக்கருத்துகளில் இந்த கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
நவீன கலைகளுக்கான தேசியக் காட்சிக்கூடம் தாகூரின் உருவப்படத் தொகுப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சேகரிப்பை தன்னிடத்தில் வைத்துள்ளது.
அவரது மிக முக்கியமான இலக்கியங்களில் சிலவற்றுக்கான பாடப் பொழிவுரை உள்ளிட்ட என்.ஜி.எம்.ஏ-வின் மதிப்புறு தொகுப்புகளில் இருந்து தாகூரின் மொத்த படைப்புகளையும் மெய்நிகர் சுற்றுலா காட்சிப்படுத்தும். என்.ஜி.எம்.ஏ அமைப்பின் கீழ் 2018ல் தொடங்கப்பட்ட நாட்டின் முதல் கலாச்சார போர்ட்டலான https://so-ham.in/gurudev-journey-of-the-maestro-through-his-visual-vocabulary/ என்ற இணையதள முகவரி மூலம் கலந்துரையாடலில் பங்கேற்க பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். சுற்றுலாவின் இறுதியில் நடைபெறும் “விநாடி-விநா” போட்டியில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளலாம்.
(Release ID: 1621808)
Visitor Counter : 165