ஆயுஷ்

கொரோனா வைரஸ் தாக்குதல் சூழலில் ஆயுஷ் வகைப்பட்ட தலையீடுகள் குறித்த பல்வகை ஆய்வுகள் முறைப்படி வெளியிடப்படவுள்ளன

Posted On: 06 MAY 2020 6:22PM by PIB Chennai

கொரோனா வைரஸ் தாக்குதல் சூழலில் ஆயுஷ் வகைப்பட்ட தலையீடுகள் குறித்த பல்வகை ஆய்வுகளை ஆயுஷ் துறைக்கான அமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் ஆகிய இருவரும் இணைந்து மே 7 அன்று புதுடெல்லியில் வெளியிடவுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக நாட்டில் உருவாகியுள்ள தொற்றுப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் ஆயுஷ் சிகிச்சை முறைகளில் (முன் தடுப்பு மற்றும் கூடுதல் தலையீடுகள் உள்ளிட்ட) மருத்துவ ஆய்வுகளின் மூலம் ஆயுஷ் அமைச்சகம் முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இத்தொற்றினால் பெரிதும் பாதிக்கப் படக்கூடியோர் இடையே ஆயுஷ் மருத்துவ வகைப்பட்ட மருத்துவரீதியான தலையீடுகள், ஆயுஷ் வகைப்பட்ட அறிவுறுத்தல்கள், கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கான ஆயுஷ் வகைப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் குறித்தும் ஆயுஷ் அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இந்த முன்முயற்சிக்கான நடைமுறை தந்திரங்களை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவுமென பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தலைவர்  டாக்டர் பூஷண் பட்வர்த்தன் தலைமையில் நிபுணர்களைக் கொண்ட பல்வேறு மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செயல்பாட்டுக் குழு ஒன்றை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியிருந்தது.

கீழ்க்கண்ட ஆய்வுகள் முறைப்படி மே 7ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளன:

  1. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான தரமான சிகிச்சைக்கு முன் தடுப்பு வகையிலும் கூடுதல் வலு ஏற்படுத்தும் வகையிலும் ஆயுர்வேத முறையில் தலையீடுகளை மேற்கொள்வது குறித்த மருத்துவ ரீதியான ஆராய்ச்சி முடிவுகள்;
  2. ஆயுஷ் வகைப்பட்ட அடிப்படையிலான முன் தடுப்பு தலையீடுகளின் தாக்கம் குறித்து மக்கள் தொகை அடிப்படையில் தலையீடுகள் குறித்த ஆய்வுகள்;
  3. கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஆயுஷ் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளுதல், பயன்படுத்தல் ஆகியவற்றின் தாக்கம் குறித்து ஆயுஷ் சஞ்சீவினி செயலியின் அடிப்படையிலான மதிப்பீடு.


(Release ID: 1621786) Visitor Counter : 228