பாதுகாப்பு அமைச்சகம்

கிழக்குப் பகுதியில் கள உருவாக்கங்களை இந்திய ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம் எம் நரவனே பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2020 8:23PM by PIB Chennai

சுக்னா, பின்னாகுரி மற்றும் பனாகர் உட்பட கிழக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கள உருவாக்கங்களை இந்திய ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம் எம் நரவனே மே 04 முதல் 05 வரை பார்வையிட்டார்.

உருவாக்கங்களின் செயல்பாட்டு தயார் நிலையையும் இதர முக்கிய பயிற்சி மற்றும் போக்குவரத்து விவகாரங்களையும் அவற்றின் தளபதிகள் இந்திய ராணுவ தலைமை தளபதிக்கு அவரின் இரண்டு நாள் பயணத்தின் போது எடுத்துரைத்தனர். களத்தில் உள்ள துருப்புகளிடம் விரிவாக உரையாடிய இந்திய ராணுவ தலைமை தளபதிஎல்லைகளில் உள்ள நிலைமைகளைக் குறித்து அறிந்துக் கொண்டார். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசத்தின் போரில் கணிசமான பங்களிக்கும் தனது முயற்சியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள பல்வேறு வசதிகளை அவர் ஆய்வு செய்தார். உயர் அளவிலான செயல்பாட்டு தயார் நிலையையும் பயிற்சி தரங்களையும் பாராட்டிய அவர், இந்த கடினமான நேரத்தில் சிறந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து நிலையினரையும் கேட்டுக் கொண்டார்.

கர்னல் அமன் ஆனந்த்

மக்கள் தொடர்பு அலுவலர் (ராணுவம்)

***


(வெளியீட்டு அடையாள எண்: 1621395) வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu