பிரதமர் அலுவலகம்
அணி சேரா இயக்க நாடுகளின் தொடர்புக் குழு மாநாட்டில் ஆன்லைன் மூலம் பிரதமர் பங்கேற்றார்.
Posted On:
04 MAY 2020 9:57PM by PIB Chennai
கோவிட் – 19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அணிசேரா இயக்க (நாம்) தொடர்புக் குழுவின் இணையதள மாநாடு மே 4ம் தேதி அன்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
‘கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற கருத்தின் அடிப்படையில் ‘நாம்’ தொடர்புக் குழுவின் மாநாடு, அந்த இயக்கத்தின் இப்போதைய தலைவரான அஜர் பைஜான் குடியரசின் அதிபர் எச்.இ.இதம் அலியேவ்வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டின் நோக்கம், இந்த கொள்ளை நோயை ஒழித்துக்கட்டவும், கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சர்வதேச ஒற்றுமையை மேம்படுத்துவது மற்றும் நாடுகள், சர்வதேச அமைப்புகளின் சக்திகளை ஒன்று திரட்டுவது ஆகியவை ஆகும். மேலும், இந்த நிகழ்ச்சியில் சர்வதேச பன்முகத்தன்மை மற்றும் அமைதிக்கான ராஜாங்கரீதியான நடவடிக்கைகள் ஆகியவை நினைவு கூரப்பட்டன.
‘நாம்’ அமைப்பின் தொடக்கக்கால உறுப்பினர் மற்றும் ‘நாம்’ அமைப்பின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை நீண்டகாலமாக பின்பற்றி வருவது இந்தியா, என்பதை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மோடியின் பங்கேற்பு அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த பிரச்சினைக்குரிய நேரத்தில் உலகத்தில் சர்வதேச ஒருங்கிணைப்பு, உள்ளடக்கிய மற்றும் சரிசமமான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினார். மேலும், உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த இயக்கத்துடன் இணைந்து தேவையான உதவிகளை முடிந்த அளவுக்கு அளிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இதுதவிர பிற வைரஸ்கள், குறிப்பிட்ட தீவிரவாதம் மற்றும் போலிச் செய்திகளுக்கு எதிராக உலகம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.
இந்த மாநாட்டில் 30 நாடுகளின் தலைவர்கள், அரசுகள் மற்றும் பிற தலைவர்கள், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும், இந்த மாநாட்டில், ஐ.நா. பொதுச் சபை தலைவர் பேராசிரியர் டிஜியானி முகமது பேண்டே, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ், ஆப்பிரிக்க கூட்டமைப்பின் தலைவர் முசா பகி மகமத், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி ஜோசெப் போரெல் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ராஸ் ஜிபிரியேசஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஒட்டுமொத்தமாக இந்த மாநாட்டில் நாம் தலைவர்கள் கோவிட்-19ஆல் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அளவீடு, அடையாளம் காணப்பட்டுள்ள மற்றும் தேவையான நிவாரண நவடிக்கைகள், செயல்திறன் அடிப்படையிலான தொடர் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உரையாற்றினர். இந்த மாநாட்டை தொடர்ந்து, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவிலான ஒற்றுமையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் உறுப்பு நாடுகளின் அடிப்படை மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக ஒரு பொதுவான அமைப்பை நிறுவி, அதன் மூலம் உறுப்பு நாடுகளின் உடனடி மற்றும் எதிர்கால தேவைகளை அடையாளம் காண ஒரு பணிக்குழுவை உருவாக்கவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
(Release ID: 1621164)
Visitor Counter : 281
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam