அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆழமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய கோவிட் 19: பேராசிரியர் அசுட்டோஷ் சர்மா

Posted On: 05 MAY 2020 12:55PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பத் துறை, அறிவியல் வளர்ச்சி என்பதையும் தாண்டி, அறிவியலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சமயமாக கோவிட் 19 நெருக்கடி காலம் அமைந்துள்ளது என்று அத்துறையின் செயலாளர் அசுட்டோஷ் சர்மா கூறியுள்ளார். இத்துறையின் 50வது ஆண்டு நிறுவன நாளை ஒட்டி `கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் - அறிவியல் ஆராய்ச்சி,  புதுமை சிந்தனைகளை சாதகமாக பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் இணையவழி பயிலரங்கு உரையாடலின் நேரலையில் உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

``விஞ்ஞானிகள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து வாய்ப்புகள் பற்றிக் கவலைப்படாமல், மாற்றங்களை உருவாக்கக் கூடிய வகையிலான சாதனங்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சில திட்டங்கள் அறிவியல்பூர்வமானவை என்றும், உயர் முன்னுரிமைப் பகுதிகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம், ஆராய்ச்சியை தீவிரப்படுத்தல் துறைகளில் பயனுள்ளவையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அறிவியலின் போக்கை மாற்றுவதாக இதுபோன்ற திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் சில கோட்பாடுகளும், அணுகுமுறைகளும், கோவிட் 19 பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

கோவிட் நோய்த் தொற்றை சமாளிக்க பன்முக வழிமுறைகளில் வெவ்வேறு திட்டங்களை அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்புகள் ஒரு மாத காலத்துக்குள் உருவாக்கின. அவற்றில் சில திட்டங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் உருவாக்கப்பட்டன. எனவே, அறிவியல் பயன்பாட்டில் ஒரு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை இப்போதைய நெருக்கடி காலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று பேராசிரியர் சர்மா கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆரம்ப நிலை நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதைப் போல, தொடக்கம் முதல் நிறைவு வரையில் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான நிதி  திட்டம் பற்றி அவர் பேசினார். நாடு முழுக்க ஆண்டுதோறும் 10 லட்சம் பள்ளிக் குழந்தைகளிடம் புதுமை சிந்தனையை ஊக்குவிக்கும் மணக் திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களின் சிந்தனைகளை வைத்து முன்னோடி திட்டங்களைத் தயாரித்து, எதிர்கால சவால்களை சமாளிக்க குழந்தைகளுக்கு உத்வேகத்தை ஊட்டுவது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. தங்களுடைய சிந்தனைகளை செம்மைப்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு உதவுவதாகவும் இத்திட்டம் உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.



(Release ID: 1621162) Visitor Counter : 253