அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 தொற்று கண்டறிவதற்கு, பரிசோதனைக்கான மாதிரிகளையும், கிருமிகளுள்ள மாதிரிகளையும் எடுத்துச் செல்வதற்கான இரண்டு வகையான உபகரணங்களை ஸ்ரீ சித்திரா தயாரித்துள்ளது

प्रविष्टि तिथि: 02 MAY 2020 6:39PM by PIB Chennai

கோவிட்19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக சளி மற்றும் கபத்தின் மாதிரிகளையும், நோய்க்கிருமி மாதிரிகளையும் எடுத்துச் செல்வதற்கான இரண்டு விதமான உபகரணங்களை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஸ்ரீ சித்திரா மருத்துவ அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தின் தொழில்நுட்பவியலாளர்கள் தயாரித்துள்ளார்கள்.

 

சித்ரா எம்பெட் ஃப்ளாக்ட் நைலான் மாதிரிகள் (மாலெலில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு) மற்றும் சித்ரா என்மெஷ் பாலிமெரிக் ஃபோம் முனைகொண்ட, பஞ்சற்ற, இந்த உபகரணங்கள் வளையும் தன்மை கொண்ட நெகிழி கைப்பிடியுடன் கூடியவை. இவை, டாக்டர் லிண்டா தாமஸ், டாக்டர்-ஷாலினி வேலாயுதன், டாக்டர் மாயா நந்தகுமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்டவை. இந்த உபகரணங்கள் மாதிரிகளை சேகரிப்பதற்கும், சேகரிக்கப்பட்ட மாதிரியை திரவ கிருமி ஊடகத்தின் மூலம் விரைவாகப் பிரித்தெடுப்பதற்கும் (கரைப்பான் உதவிகொண்டு அலசி ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளைப் பிரித்தெடுப்பது) தேவையான நிரூபிக்கப்பட்ட திறன் கொண்டவை. இந்த மாதிரிகள் மற்றும் ஊடகம் மூலம் சேகரிக்கப்பட்ட கிருமி  ஆர் என் ஏ வைக் கண்டறியவும் இவை பயன்படும். இந்த மாதிரிகள் நோய் நுண்மை நீக்கப்பட்ட, உடனடி பயன்பாட்டுக்கு தயாரான கருவிகளாகக் கிடைக்கும்.

பணிச்சூழலில் திறமையாகவும், வசதியாகவும் கையாளக்கூடிய வண்ணம் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு குறைந்தபட்ச சிரமம் மட்டுமே உள்ள அளவிற்கு, மாதிரிகள் சேகரிக்கும் முறை மேம்பட இவை உதவும். சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பாக் செய்யும் போது சுகாதாரப் பணியாளர்கள், மாதிரிகளுடன், குறைந்தபட்ச தொடர்பு மட்டுமே வைத்திருக்கப் போதுமான அளவிற்கு பாதுகாப்பான, வசதியான முறையில் இடைவெளி இருப்பதையும் இவை உறுதி செய்யும்.

 


(रिलीज़ आईडी: 1620623) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Odia , Telugu