சுற்றுலா அமைச்சகம்

‘இலக்கு - சரிஸ்கா புலிகள் சரணாலயம்’ என்ற தலைப்பில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho Apna Desh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் பதின்மூன்றாவது தொடர்

Posted On: 02 MAY 2020 3:12PM by PIB Chennai

வனவிலங்கு பூங்காக்கள், வனப்பகுதிகள் ஆகியவை ஒவ்வொருவருக்கும் தனித்துவம் வாய்ந்த அனுபவ வாய்ப்புகளை அளிக்கின்றன. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற இணையவழிக் கருத்தரங்கின் பதிமூன்றாவது தொடர், 01 மே 2020 அன்று நடைபெற்றது. ‘இலக்கு- சரிஸ்கா புலிகள் சரணாலயம்’ என்ற தலைப்பிலான இந்த இணைய வழிக் கருத்தரங்கில், ராஜஸ்தானில் ஆள்வார் மாவட்டத்திலுள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளை அவை வாழும் இடத்திலேயே காணுதல், மற்றும் வனவிலங்குகளுடன் சாகசங்கள் பற்றிய மெய் நிகர் சுற்றுலா விளக்கப்படங்கள் காண்பிக்கப்பட்டன.

தெஹலா, சரிஸ்கா மனார் நிறுவனர் திரு.கஜேந்திர சிங்க் பன்வர் மற்றும் இம்மென்ஸ் மார்கெடிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு தீரஜ் திரிவேதி ஆகியோர் இக்கருத்தரங்கில் விளக்கங்களை அளித்தனர்.   

மிகவும் பிரபலமாகாத சுற்றுலாத்தலங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் பற்றி  வெளியுலகிற்கு அதிகம் தெரியாத விஷயங்கள் ஆகியவற்றை உலகறியச் செய்வது உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆகியவையே, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த இணையவழிக் கருத்தரங்கின் நோக்கமாகும். 

இந்த இணையவழிக் கருத்தரங்குகளை காணத் தவறியவர்கள், இவற்றை இங்கு காணலாம்.  

 https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

மத்திய அரசின் சுற்றுலாத்துறை சமூக வலைத்தளங்களிலும் இவற்றைக் காணலாம்.



(Release ID: 1620446) Visitor Counter : 213