விவசாயத்துறை அமைச்சகம்

7 மாநிலங்களில் இருந்து 200 புதிய மண்டிகள் e-NAM என்ற இணைய தளம் மூலம் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய ஒருங்கிணைப்பு

Posted On: 01 MAY 2020 5:28PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், 2020 மே மாதத்திற்குள் வேளாண் விளைபொருள்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதற்கான e-NAM தளத்தில் சுமார் ஆயிரம் மண்டிகள் சேரும் என்று தெரிவித்துள்ளார். இன்று கிருஷி பவனில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய போது, அங்கு ஏழு மாநிலங்களில் இருந்து 200 புதிய மண்டிகள் இ-நாம் இணைய தளத்தில் சேர்க்கப்பட்டன. அப்போது அமைச்சர் நிலக்கடலை மற்றும் மக்காச்சோளத்தை கர்னூல், ஹூப்ளியில் இருந்த மண்டிகளுக்கு இடையில் வீடியோ மாநாடு மூலம் நேரடி வர்த்தகத்தைத் துவக்கி வைத்தார். விவசாயிகளின் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான பிரதமரின் நோக்கம் விரைவில் நிறைவேறும் என்றார்.

இன்று இ-நாம் தளத்துடன் ஒருங்கிணைந்த 200 சந்தைகள் பின்வருமாறு: ஆந்திரா (11 மண்டிகள்), குஜராத் (25 மண்டிகள்), ஒடிசா (16 மண்டிகள்), ராஜஸ்தான் (94 மண்டிகள்), தமிழ்நாடு (27 மண்டிகள்), உத்தரப்பிரதேசம் ( 25 மண்டிகள்), கர்நாடகா (02 மண்டிகள்). இது நாட்டின் மொத்த இ-நாம் மண்டிகளை 785 ஆகக் கொண்டுவரும். நாடு முழுவதும் 415 புதிய சந்தைகளை ஒருங்கிணைக்கும் பாதையில் அடைந்த முதல் மைல் கல் இதுவாகும். இ-நாம் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடக மாநிலம் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடைக்கோடி விவசாயியை அடைவதற்கும், அவர்கள் வேளாண் விளைபொருள்களை விற்கும் முறையை மாற்றுவதற்கும் உதவி வரும் இந்தப் புதிய மண்டிகள் அதிகமான விவசாயிகளையும், வர்த்தகர்களையும் சென்றடைவதன் மூலம் -நாம் அதிக வலுப்பெற்றுள்ளது. ஏற்கனவே 16 மாநிலங்கள் மற்றும் 02 யூனியன் பிரதேசங்களில் 585 மண்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தால் ஊக்குவிக்கப்பட்ட மின் வர்த்தக தளமான கர்நாடகாவின் ராஷ்டிரிய மின் சந்தைச் சேவைகளின் (ReMS),  ஒருங்கிணைந்த சந்தைத்தளத்துடன் (UMP) இன்று முதல் -நாம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒற்றை உள்நுழைவுக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இரு தளங்களிலும் உள்ள வர்த்தகர்கள் இரு தளங்களிலும் தடையற்ற வர்த்தகத்தை செயல்படுத்த இது உதவும்.

இந்தியாவில் முதல்முறையாக இந்த அளவிலான வேளாண் பொருள்களுக்கான இரண்டு வெவ்வேறு மின்-வர்த்தகத் தளங்கள் இயங்கக் கூடியதாக மாற்றப்படும். இது கர்நாடகாவின் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இ-நாமில் பதிவு செய்துள்ள ஏராளமான வர்த்தகர்களுக்கு விற்க உதவும், மேலும் பிற மாநிலங்களில் உள்ள இ-நாம் மண்டிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூட கர்நாடகாவின் ReMS தளத்துடன் பதிவு செய்யப்பட்ட கர்நாடக வர்த்தகர்களுக்கு தங்களது விளைபொருள்களை விற்க முடியும். இது கர்நாடகா மற்றும் இ-நாம் தளத்தில் இணைந்துள்ள மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும்.

1.66 கோடி விவசாயிகள் மற்றும் 1.28 இலட்சம் வர்த்தகர்கள் இ-நாம் மேடையில் பதிவு செய்துள்ளதால் இ-நாம் வெகு தூரம் வரை கடந்து வந்துள்ளது. ஏப்ரல் 30, 2020 நிலவரப்படி, மொத்த வர்த்தக அளவு 3.41 கோடி மெட்ரிக் டன் மற்றும் 37 இலட்சம் எண்ணிக்கையில் (மூங்கில் மற்றும் தேங்காய்) மொத்தமாக சுமார் 1.0 இலட்சம் கோடி ரூபாய் இ-நாம் மேடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையில் பழைய பாதையை தகர்த்தெறிந்து புதிய புரட்சிகரப் பாதையை உருவாக்கியதன் மூலம், இ-நாம் ஆன்லைன் தளம் இந்தியாவில் விவசாய சந்தையை சீர்திருத்துவதில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

e-NAM மண்டி / மாநில எல்லைகளுக்கு அப்பால் வர்த்தகத்தை எளிதாக்குகிறது. 12 மாநிலங்களுக்குள் மொத்தம் 233 மண்டிகள் இடை வர்த்தகத்தில் பங்கேற்றுள்ளன, அதே போல 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், இ-நாம் மேடையில் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில் பங்கேற்றுள்ளதுடன், விவசாயிகள் தொலைதூரத்தில் அமைந்துள்ள வர்த்தகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் இது வகை செய்கிறது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுகளைப் பதப்படுத்தும் நிறுவனங்கள் (FPOs) இ-நாம் இணையதளத்தில் களம் இறங்கியுள்ளன.

கூடுதலாக, கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க அமைச்சகம் கடந்த மாதம் -நாமில் இரண்டு முக்கிய முறைகளை அறிமுகப்படுத்தியதுஇதனால் விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை மண்டிக்குக் கொண்டு வராமலேயே விற்க முடியும். இந்த முறைகள் பின் வருமாறு: உணவு பதப்படுத்தும் நிறுவனத்தின் (FPO) விவசாய உறுப்பினர்கள் தங்கள் சேகரிப்பு மையத்திலிருந்து வர்த்தகம் செய்ய அந்த நிறுவனம் உதவும். மற்றொன்று சேமிப்புக் கிடங்கு மூலம். இதன் துணை கொண்டு விவசாயிகள் தங்கள் சேமித்து வைத்திருக்கும் பொருள்களைக் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் விற்க முடியும், இது மாநிலங்களால் மண்டி எனக் கருதப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

கூடுதலாக, அமைச்சகம் சமீபத்தில் "கிசான் ராத்" மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது விவசாயிகள் தங்கள் சரக்குகளை அருகே உள்ள மண்டி அல்லது சேமிப்புக் கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்லப் பொருத்தமான போக்குவரத்து வாகனங்கள் / டிராக்டரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது.

இணைய மாநாடு மூலம் நடைபெற்ற இன்றைய நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர்கள், திரு. பர்ஷோட்டன் ரூபாலா மற்றும் திரு. கைலாஷ் சவுத்ரி, செயலாளர் (AC & FW) திரு. சஞ்சய் அகர்வால் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


(Release ID: 1620126)