குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களைத் துரிதப்படுத்துவதிலிருந்த தடைகளை அரசு நீக்கியது; விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதை காதி, கிராமத்தொழில் ஆணையம் (KVIC) உறுதிப்படுத்த வேண்டும்
Posted On:
01 MAY 2020 4:32PM by PIB Chennai
நாட்டில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான கால அளவு விரைவுபடுத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி தலைமையிலான சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைகளுக்கான அமைச்சகம், முக்கிய கொள்கை முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி பிரதமர் வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான பணிக்குழு பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்ற தேவை இனி இல்லை. மாவட்ட அளவிலான பணிக்குழுவின் DLTFC இந்தப்பணி நீக்கப்பட்டுவிட்டது. இதனால் இத்திட்டத்திற்கான நடைமுறை மேலும் எளிதாக்கப்பட்டுவிட்டது.
திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி, பிரதமர் வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மைய முகமையான காதி மற்றும் கிராமப்புறத் தொழில் துறை ஆணையம் (Khadi and Village Industries Commission - KVIC) உருவாகவுள்ள நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை /திட்டங்களை, முறைப்படி மிகுந்த கவனத்துடன், நேரடியாக பரிசீலனை செய்து, அவற்றை கடன் வழங்கும் முடிவுகள் எடுப்பதற்காக, நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பலாம். இதுவரை திட்டங்கள் மாவட்ட அளவிலான செயல் குழுக்கள் (District Level Task Force Committee - DLTFC) மூலமாகவே பரிசீலிக்கப்பட்டு வந்தன. இதனால் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டு வந்தது.
மாவட்ட அளவிலான செயல் குழுக்கள் நீக்கப்பட்டு விட்டதையடுத்து, பிரதமர் வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டத்தின் கீழ் பெறப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு இருந்த பெரும் இடையூறு நீக்கப்பட்டுவிட்டது என்று கிராமப்புறத் தொழில் துறை ஆணையத்தின் (KVIC) தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறினார். நாட்டின் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய அமைச்சர் திரு.கட்காரிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள, தேசிய அளவிலான பொது முடக்கம் காரணமாக வேலைவாய்ப்புப் பிரிவு பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், அரசின் இந்த முடிவு வந்துள்ளது. திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு, திருத்தி அமைக்கப்பட்ட கொள்கை வழிவகுக்கும். கிராமப்புறங்களிலும் ஊரகப் பகுதிகளிலும், பிரதமர் வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டத்தின் கீழ் புதிய வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும்.
(Release ID: 1620104)
Visitor Counter : 214