நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய உணவு கழகம் ஏப்ரல் மாதத்தில் 60 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை விநியோகித்துள்ளது, இது மாத சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்

Posted On: 30 APR 2020 6:45PM by PIB Chennai

இந்திய உணவு கழகம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட அறுபது லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை விநியோகித்தது. மார்ச் 2014 இல் அடையப்பட்ட 38 லட்சம் மெட்ரிக் டன் என்ற மிக உயர்ந்த இலக்கை விட 57% உயர்த்தியது. இது சாதாரண மாத சராசரியான சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன்னை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த அளவு சாலை போக்குவரத்தின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லே / லடாக் வரை  உள்ள பகுதிகளின் மூலம் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன், அருணாச்சல பிரதேசத்தின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேகாலயாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 0.81 லட்சம் மெட்ரிக் டன்னையும் உள்ளடக்கியது. இதில் சுமார் 0.1 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் அந்தமான் மற்றும் லட்சத்தீவு தீவுகளுக்கும் கடல் வழியாக அனுப்பப்பட்டன.

கோவிட் -19 தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், ஏப்ரல் மாதத்தில் இந்திய உணவு கழகம், பல்வேறு நுகர்வு மாநிலங்களில் சுமார் 58 லட்சம் மெட்ரிக் உணவு தானியங்களை கொண்டு சேர்த்துள்ளது.

 

**********



(Release ID: 1619997) Visitor Counter : 192