நிலக்கரி அமைச்சகம்

பொதுத்துறை நவரத்னா நிறுவனமான என்.எல்.சி இந்தியா முதல் முறையாக நிலக்கரி உற்பத்தியை தொடங்கியது

Posted On: 30 APR 2020 6:05PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பொதுத்துறையின் நவரத்னா என்.எல்.சி இந்தியா நிறுவனம் முதன் முறையாக நிலக்கரி உற்பத்தியைத் தொடங்கியது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 மற்றும் 3 சுரங்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி, 2016 ஆம் ஆண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 20 மில்லியன் டன் கொள்ளளவுவுடன் ஒதுக்கப்பட்டது, அதன் தற்போதைய மற்றும் எதிர்கால நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களின் தேவையை நிறைவு செய்ய இவை பயன்படுத்தப்படும்.

இந்த வளர்ச்சி குறித்து என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் திரு.ராகேஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், “கோவிட் -19 பொது முடக்க சூழ்நிலையில் கடினமான தருணத்தில் இந்த திட்டத்தின்  வெற்றியை அடைவதன் மூலம், எங்கள் குழு இந்நிறுவனத்தின் வளர்ச்சி பாதையில் அதற்கு உதவியது மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பங்களித்திருப்பது, குறிப்பாக நிலக்கரி இறக்குமதியைத் தவிர்ப்பதையும் மிகவும் முன்னுரிமையாக கொண்டுள்ளது” என்று கூறினார்


(Release ID: 1619996) Visitor Counter : 231