மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறியுமாறு மின்னணுத் துறையினருக்கு திரு ரவி சங்கர் பிரசாத் அறிவுரை.
Posted On:
29 APR 2020 8:41PM by PIB Chennai
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் புதிய வாய்ப்புகளை மின்னணுத் துறை கண்டறிய வேண்டுமென்றும், மின்னணு உற்பத்தித் துறையில் உலகின் சந்தையாக நமது நாட்டை, மாறச் செய்வது குறித்தும், மின்னணுத் துறை கண்டறிய வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்
அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய திட்டங்களில் இருந்தும், புதிய வாய்ப்புகளிலிருந்தும் பயன் பெறுமாறும், உலக முதலீட்டின் கவனத்தை ஈர்க்குமாறும், மின்னணு துறையை வலுப்படுத்துமாறும், மின்னணு தொழில் துறை சங்கங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் முக்கிய தொழில் துறையினருடன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவ மின்னணு தொழில் துறை, தற்போது முழு திருப்புமுனையில் உள்ளது என்றும், இத்துறையின் பங்கு தற்போது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட் - 19 நோய் குறித்த தற்போதைய நிலைமைகளையும், ஆரோக்கிய சேது செயலி குறித்தும் அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆரோக்கிய சேது செயலி இதுவரை நாட்டிலுள்ள 8 கோடி அலைபேசிகளைச் சென்றடைந்தமைக்கு உதவியாக இருந்த அலைபேசித் துறையினருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். கோவிட் - 19 நோய் தாக்கத்தைக் குறைப்பதற்கான நோக்கத்துடன், குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களாக அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள MeitY திட்டங்களின் படி, மின்னணு உற்பத்தி வளர்ச்சிக்காக
மின்னணு அமைப்புகள் வடிவமைப்பு, உற்பத்தி, திறன் மேம்பாடு (Electronics System Design & Manufacturing, Skill Development – ESDM) தொழில் துறைக்கு, மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதி உதவி செய்ய உள்ளது. கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஆரோக்கிய சேது, ஆதார், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற MeitY ன் பல்வேறு முயற்சிகள் மிக முக்கியமான பங்காற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
ESDM மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில், உலக அளவிலான வாய்ப்புகளைக் கைப்பற்றும் வகையில், மறுதொடக்கம், மறுகட்டமைத்தல், மீண்டெழுதல் என்ற மாதிரி திட்டத்தை தொழில்துறைப் பிரதிநிதிகள் முன்வைத்தனர். மின்னணு உற்பத்தி முறைக்கு ஆதரவான PLI, SPECS மற்றும் EMC 2. 0 ஆகிய மூன்று புதிய திட்டங்களுக்கு, கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் பாராட்டு தெரிவித்தனர்
மின்னணு துறைக்கு முழு ஆதரவு அளிக்குமாறும், மின்னணு உற்பத்தித் துறை வசதிகளை மீண்டும் துவக்குவது குறித்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் மத்திய அமைச்சர், அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
(Release ID: 1619890)
Visitor Counter : 252