அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாட்டிலுள்ள அனைத்து மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மைய ஆய்வுக்கூடங்களும், அவை உள்ள பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள இடங்களிலும், தேவைப்படும் மக்களுக்கு உணவு, சுத்திகரிப்பான்கள், முகக்கவசங்கள் போன்றவற்றை அளித்து உதவி

Posted On: 30 APR 2020 3:18PM by PIB Chennai

மைசூருவை மையமாகக் கொண்ட மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மையமும்,  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமும் (CSIR CFTRI) இணைந்து  நாட்டில், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட மிக உயர்ந்த சத்து கொண்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் வகையிலான, எண்ணிலடங்காத பல்வேறு உணவு மற்றும் உணவு தொழில்நுட்ப முறைகளை, பல ஆண்டுகளாக ஆய்ந்தறிந்து நாட்டிற்கு அளித்து வந்துள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட சுமார் 56 ஆயிரம் பேருக்கு 10 ன் உயர் புரத பிஸ்கட்டுகள், ஒரு ன் கடற்பாசி சிக்கி, 10 ன் ஏலக்காய் ம் கொண்ட குடிநீர், 5 ன் நியூட்ரி ப்ரூட்ஸ் பார்கள் ஆகியவற்றை CSIR CFTRI, வழங்கியுள்ளது. CSIR CFTRI, மூலமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் பலநாட்கள் நல்ல நிலையில் இருக்கக் கூடியவை. எனவே அவற்றை நீண்டகாலம் வைத்திருக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து SARS COV 2 வைரசுக்கு எதிராகப் போராட உதவி செய்யும் வகையிலான நுண்ணூட்டச் சத்துக்களும் இவற்றில் உள்ளன.

 

இது தவிர, புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொண்டதன் பேரில், உயர் புரதச்சத்து கொண்ட 500 கிலோ பிஸ்கெட்டுகளும், உயர் புரதச்சத்து கொண்ட 500 கிலோ ஸ்குகளும் வழங்கப்பட்டன. மற்ற சாதாரண பிஸ்கட்டுகளை விட, இந்த பிஸ்கட்டுகளில் 60 முதல் 80 சதவிகிதம் அதிகப் புரதச்சத்து உள்ளது.

 

நோய் எதிர்ப்பு சக்திக்கு நேர்மறை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், புரதம் அல்லது தாதுப்பொருள்கள் அல்லது வைட்டமின்கள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருள்களாக வழங்கப்படும் விதத்தில் சத்தான பொருள்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏனென்றால், பொது முடக்கக் காலத்தின் போது நிலவும் நிச்சயமற்ற தன்மை, தனிமை, மிக அதிகமான கவலை ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, இது அவசியம் தேவை என்று CSIR CFTRI, இயக்குநர் டாக்டர் கே எஸ் எம் எஸ் ராகவ ராவ் கூறினார்

 

உணவு வழங்கி உதவுவது மட்டுமல்லாமல், தொழில்துறையின் ஆதரவுடன் கிராமப்புறத் தொழில்கள் மூலமாக, கிராமப்புற/ சமுதாயத் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஆதரவு அளிப்பது குறித்தும், சிஎஸ்ஐஆர் திட்டமிட்டு வருகிறது. கோவிட்-19 நோய் பரவுகின்ற இந்தக் காலங்களில், கிராமங்களுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் அதிகமாகச் சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்க இது உதவும். தொற்றுநோய்த் தடுப்பான்கள், சுத்திகரிப்பான் சானிடைசர்கள்,  சோப்புகள், முகக்கவசங்கள், கையுறைகள், உணவுப்பொருள்கள், தண்ணீரை சுத்திகரிக்கும் உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், தயாரிக்கவும், சமூக மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளிப்பதும் இதில் அடங்கும்.



(Release ID: 1619711) Visitor Counter : 132