புவி அறிவியல் அமைச்சகம்

அனைத்திந்திய வானிலை தகவல் சுருக்கம் மற்றும் முன்னறிவிப்பு

प्रविष्टि तिथि: 29 APR 2020 5:45PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், அடுத்த ஐந்து நாட்களுக்கு வெளியிட்டுள்ள தகவல் சுருக்கமும் அனைத்திந்திய வானிலை முன்னறிவிப்பும் வருமாறு:

* தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதைத் தொடர்ந்த 48 மணி நேரத்தில் அது இன்னும் பலமடைந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, அதற்குப் பின் இன்னும் வலுப்பெற வாய்ப்புகள் அதிகமுள்ளன.

மே 01இல் இருந்து 03 வரை வடக்கு வடமேற்கு திசை நோக்கியும், அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் மியன்மார் வங்கதேசக் கடற்கரையை நோக்கியும் செல்ல வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளன.

02 மே அன்று மிக முதல் மிக அதிகமான மழை வரை நிகோபார் தீவுகளிலும், 01,  03 ஆகிய தினங்களில் அதே பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளில் அதிக மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

* இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி/காற்று இடை நிறுத்தத்தின் காரணமாக இந்திய தீபகற்பத்தில், அடுத்த இரு நாட்களுக்கு கேரளா,  மாஹேவிலும், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகாவின் வட உள்பகுதிகளில் 29 ஏப்ரல் முதல் 01 மே வரையிலும், விட்டு விட்டும், பரவலாகவும் மழை/இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


(रिलीज़ आईडी: 1619343) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati