அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மறதிநோயைத் தடுப்பதற்கான இயற்கையான மருந்துப் பொருளை, ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கினர்

Posted On: 29 APR 2020 12:40PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மறதிநோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் வகையில், பெர்பெரைன் (Berberine) அமைப்பை திறம்பட செயல்படும் உயிர்ப்பொருள் அமைப்பாக மாற்றி அமைத்துள்ளனர். இதன்படி, வர்த்தக ரீதியில் கிடைக்கும் curcumin (மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகப் பொருள்) போன்ற இயற்கையான மற்றும் குறைந்த விலையிலான பெர்-டி (Ber-D) ஆக மாற்றும் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களது ஆராய்ச்சிப் பணிகள், iScience என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்வர்ணஜெயந்தி கல்வி நிதித் திட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுவரும் பேராசிரியர் டி.கோவிந்தராஜு தலைமையிலான குழுவினர், மறதி நோய்க்கு இயற்கையான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக இந்தியா மற்றும் சீனாவில் கிடைக்கும் மற்றும் பாரம்பரிய மருத்துவம் மற்றும் பிற முறைகளில் பயன்படுத்தப்படும் isoquinoline அடிப்படையிலான இயற்கைப் பொருளான பெர்பெரைனைத் தேர்வுசெய்தனர்.



(Release ID: 1619278) Visitor Counter : 174