வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கல்யாண்-டோம்பிவிலி பொலிவுறு நகரின் கோவிட்-19 குறித்த தகவல் தொகுப்பை பொதுமக்களும் தற்போது பார்க்கலாம்

Posted On: 29 APR 2020 12:34PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் பரவல் குறித்த தகவல் தொகுப்பை (Dashboard) பொதுமக்களும் பார்த்து அறிந்துகொள்ளலாம் என மாநகராட்சி அண்மையில் அறிவித்துள்ளது. மாநகராட்சியின் வலைதளம், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற மாநகராட்சியின் பிற சமூக வலைதளக் கணக்குகள் மூலம் இந்தத் தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதனை பார்த்துத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தகவல் தொகுப்பை https://kdmc-coronavirus-response-skdcl.hub.arcgis.com/

என்ற முகவரியில் பார்க்கலாம்.

தகவல் தொகுப்பின் முக்கிய அம்சமாக, drop menu-வைப் பயன்படுத்தும்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த வார்டிலும் கோவிட் வைரஸ் பரவலின் நிலை மற்றும் அதுதொடர்பான வரைபடங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும். நகரின் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதி வார்டை கிளிக் செய்தும் தகவல்களைப் பார்க்க முடியும். செயற்கைக்கோள் வரைபடம், சாலை வரைபடம் போன்ற வழிவகைகளைப் பயன்படுத்தியும் வரைபடங்களைப் பல விதங்களில் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1619238) Visitor Counter : 229