வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. மிச்சமுள்ள 3 மாநிலங்களில் கடந்த சில நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் இல்லை: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 27 APR 2020 6:12PM by PIB Chennai

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள் கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றுள்ள நிலையில், மிச்சமுள்ள 3 மாநிலங்களில் கடந்த சில நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் இல்லை. வட கிழக்கு சபை, ஷில்லாங்கின் மூத்த அதிகாரிகள், மற்றும் வட கிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் கழகம், வடகிழக்கு கைவினைப் பொருள்கள்,  கைத்தறி வளர்ச்சிக் கழகம், வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம், பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கலந்து கொண்ட காணொளி ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, வட கிழக்கு, மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சக மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர், டாக்டர். ஜிதேந்திர சிங் இதைத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆறு ஆண்டுகளில் வட கிழக்குப் பிராந்தியம் வளர்ச்சிக்கான மாற்றத்தின் எடுத்துக்காட்டாக மாறியுள்ளதாக திருப்தி தெரிவித்தார். அதுவும், தற்போதைய கொவிட் நெருக்கடியில், அது ஒரு சிறப்பான, மகத்தான மற்றும் ஒழுக்கமான சுகாதார மேலாண்மையின் எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட ஐந்து வட கிழக்கு மாநிலங்கள் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருக்கும் நிலையில், மிச்சமுள்ள மூன்று மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோராம் ஆகியவை முறையே 8, 11 மற்றும் 1 கொரோனா பாதிப்புகளுடன், நேற்றிரவிலிருந்து எந்த புதிய பாதிப்பும் இல்லாமல், கொரோனா தொற்றிலிருந்து விடுபடக் காத்திருப்பதாக தெரிவித்தார். வட கிழக்கு மாநிலங்களின் அரசுகள், அவற்றின் முதல் அமைச்சர்கள், வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வட கிழக்கு சபையின் அதிகாரிகளுக்கு, இதை சாத்தியமாக்கியுள்ள சரியான ஒருங்கிணைப்புக்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா பராமரிப்பு, தீவிர சிகிச்சை மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றின் மேலாண்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டங்கள் குறித்த முன்மொழிதல்கள் பல்வேறு வட கிழக்கு மாநிலங்களான மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவை பரிசீலனையில் உள்ளதாகவும் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் முன்னுரிமை அளித்து கையாளப்படும் என அவர் கூறினார். மேலும், வட கிழக்கு மாநிலங்களின் தேவைகளுக்காக, தொடக்கத்திலேயே, பொது முடக்கத்துக்கு மிகவும் முன்னரே, ரூ. 25 கோடியை கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்காக இடைவெளி நிதியாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, விலக்களிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முக்கியமாக மூங்கில் தொடர்பான வேலைகள் உட்பட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக நடைபெறுவது குறித்த தகவலையும் கூட்டத்தின் போது டாக்டர். ஜிதேந்திர சிங் பெற்றார்.

***



(Release ID: 1618742) Visitor Counter : 571