வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியின் கோவிட்-19 போர்க்காலத் துணை வலு தொழில்நுட்பம், திறம்பட முடிவு எடுப்பதற்காக தகவல் தரவுத் தடம் அறிதலைப் பயன்படுத்துகிறது

Posted On: 24 APR 2020 6:21PM by PIB Chennai

புனே நகரத்தில் கோவிட்-19 சூழலைத் தடம் அறியவும், கண்காணிக்கவும் பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி நிர்வாகமானது (PCMC) கோவிட்-19 போர்க்காலக் கட்டுப்பாட்டு அறையை நிர்மாணித்துள்ளது.  பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக தகவல் தரவுகளை சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய பணிகளுக்கு போர்க்காலக் கட்டுப்பாட்டு அறையில் தொழில்நுட்பத்தீர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை சரியான முடிவை எடுப்பதற்கும் உதவியாக இருக்கின்றன.

சுகாதாரப்பராமரிப்பு மற்றும் நோயாளிகளைத் தடம் அறியும் கட்டுப்பாட்டு அறை:  கோவிட் தொற்று நோயாளிகள், பரிசோதனை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்த நிகழ்நேரத் தகவலை வழங்கும் வகையில் பி.சி.எம்.சி ஒரு டேஷ்போர்டை உருவாக்கியுள்ளது.

கோவிட்-19 ஜி.ஐ.எஸ் (GIS) கட்டுப்பாட்டு அறை: இது இருப்பிடம் சார்ந்த தகவல் அமைப்பில் இயங்குகிறது.  வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் (வரைபடத்தில் ஊதா நிறப் புள்ளிகள்), கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகள் இருந்த கடைசி இருப்பிடம் (சிகப்பு நீர்த்துளி குறியீடுகள்), குறிப்பிட்ட பகுதியின் தடுப்பெல்லை (கறுப்பு கோடுகள்), பாதைத் தடுப்பு, ஆகியவற்றை புவியிட அமைப்பு முறையில் குறிப்பிடுவதற்கு இந்த டேஷ்போர்ட் உதவுகிறது.

நகரக்கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை: அனைத்து வகையான நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பி.சி.எம்.சி முழுவதும் 85 இடங்களில் 298 ”பாயிண்ட்-டில்ட்-சூம்” கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாரதி உதவி எண் கட்டுப்பாட்டு அறை: பி.சி.எம்.சி நிர்வாகமானது சாரதி (உதவி எண் தகவல் மூலமாக குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு உதவுகின்ற அமைப்பு) என்ற பிரத்யேக உதவி எண் அமைப்பைப் பெற்றிருக்கிறது.  இந்த சாரதி அமைப்பு மூலம் குடிமக்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும் சேவை குறித்த உதவிகளைக் கேட்டுப் பெறலாம்.



(Release ID: 1618135) Visitor Counter : 170