பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கானொளி மாநாட்டின் மூலம் கொவிட்-19ஐ எதிர்ப்பதில் ஜம்மு காஷ்மீரின் (J&K) தயார் நிலையை மத்திய இணை அமைச்சர் (பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை) டாக்டர் ஜிதேந்திர சிங் மதிப்பாய்வு செய்கிறார்.

Posted On: 24 APR 2020 12:51PM by PIB Chennai

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கான மத்திய இணை அமைச்சர் மற்றும் பிரதம மந்திரி அலுவலக இணை அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங், கொவிட்-19 வைரசை எதிர்ப்பதில்  ஜம்மு காஷ்மீரின் (J&K) தயார் நிலையை இன்று மதிப்பாய்வு செய்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் (J&K) மூத்த அதிகாரிகள், அரசு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் ஆகியவர்களுடன் கானொளி மாநாட்டின் மூலம் மறு ஆய்வு நடைபெற்றது.

கொரோனா வைரசைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காக நோயாளிகளை நேரடியாகக் கையாளும் யூனியன் பிரதேசத்தின் மருத்துவ சகோதரத்துவத்தை, குறிப்பாக இளநிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார். கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார் அவர். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கேரள மாநிலத்தைப் போலவே ஜம்மு காஷ்மீர் சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றார். டாக்டர் ஜிதேந்திர சிங் கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட ‘ஆரோக்கியசேது’ பயன்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பில் அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்றும், இந்தக் காரணத்திற்காக சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டளை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தரமான தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற கருவிகள் கிடைப்பதை அதிகரிக்க, யூனியன் பிரதேசங்களின் கோரிக்கையின் அடிப்படையில், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து தனி நபர் பாதுகாப்பு உபரகணங்களையும் மற்றும் கொரோனா வைரசிற்கான சோதனைக் கருவிகளையும் பெறுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

மதத்தலைவர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்து ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வீடியோக்களும் பரப்பப்படுவதாகவும் மாண்புமிகு அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முன்னணி ஊழியர்களுக்கும் மக்களுக்கும் ஆயுஷ் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.

**********



(Release ID: 1617787) Visitor Counter : 208