அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட் பரவலைத் தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சு
Posted On:
23 APR 2020 2:36PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சு பற்றிய ஆராய்ச்சியை பரீதாபாத்தைச் சேர்ந்த மண்டல உயிரிதொழில்நுட்ப மையத்தின் டாக்டர் .அவினாஷ் பஜாஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளது.
உருமாற்ற சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர். மிலன் சுர்ஜித், ஐஐடி தில்லியின் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் டாக்டர். சாம்ராட் முகோபாத்யாயா ஆகியோருடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மண்டல உயிரி தொழில்நுட்ப மையம், மத்திய அரசு உயிரி தொழில்நுட்பத் துறையால், யுனெஸ்கோவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.
டாக்டர். பஜாஜின் குழு, நுண்ணுயிரிகளின் சவ்வுகளைத் தெரிவு செய்து தாக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மூலக்கூறுகளைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றதாகும். கோவிட்-19 வைரசின் தெரிவு செய்த துகள்களின் சவ்வுகளைத் தாக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதில் இந்தக்குழு தனது நிபுணத்துவத்தை வழங்கும். இந்த மூலக்கூறுகள் , கண்ணாடி, பிளாஸ்டிக், பருத்தி, நைலான், பாலியெஸ்டர் போன்ற துணிகள் போன்ற பல்வேறு மேல் பரப்புகளில் தங்கியிருக்கும் தொற்றுகளைக் கண்டறிந்து, அவற்றை ஆற்றலுடன் தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சை வழங்கப் பயன்படும்.
------------
(Release ID: 1617486)
Visitor Counter : 237