பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கவுன்சிலர்கள்/ கார்ப்பரேட்டர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கோவிட்-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2020 6:55PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கவுன்சிலர்கள் / கார்ப்பரேட்டர்களுடன், கோவிட்-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று விவாதித்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த காணொளி மாநாட்டில், டாக்டர் ஜிதேந்திர சிங் பல்வேறு முனிசிபல் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். ஜம்மு மேயர் சந்திரமோகன், அனந்த்நாகிலிருந்து ஹிலால் ஷா, லேவிலிருந்து டாக்டர் இஷே, கத்துவாவிலிருந்து நரேஷ் குமார், ஹீரா நகரிலிருந்து விஜயகுமார் ஷர்மா, குப்வாராவிலிருந்து ரியாஸ் அகமது மிர்,: உதம்பூரிலிருந்து டாக்டர் யோகேஷ்வர் குப்தா, பில்லாவரிலிருந்து உமா காந்த் பசோத்ரா, பதார்வாவிலிருந்து டாக்டர் ஷாகித் முகல், தோடாவிலிருந்து வேதபிரகாஷ், ரீசீயிலிருந்து சுரேஷ் பூரி, ரஜோரியிலிருந்து முஹம்மது ஆரிப், காத்ராவிலிருந்து சசிகுமார் மற்றும் அஜய் பாரு, கிஷ்டுவாரிலிருந்து ரயாஸ், படோட்டிலிருந்து எஸ் ரவீந்தர் சிங், ரம்பானில் இருந்து அமீர் தாக்கூர் ஆகியோர் உட்பட பலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஊரடங்கு இருந்தபோதிலும், சில விதிமுறைகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதாகக் கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டின் மற்ற இடங்களில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களில், மீண்டும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பவேண்டும் என்று விழைபவர்கள், மீண்டும் ஜம்மு காஷ்மீர் திரும்புவதும், மற்ற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பவேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் மாநிலங்களுக்குத் திரும்புவதும் என்பதுமே மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர்களிடமிருந்தும், மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள்கள் பல தமக்கு வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1617443)
வருகையாளர் எண்ணிக்கை : 139