பாதுகாப்பு அமைச்சகம்
பஞ்சாபில் உள்ள, சுற்றிலும் அந்நிய எல்லையைக் கொண்டுள்ள கசோவால் பகுதியை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் 484 மீட்டர் நிரந்தர பாலத்தை எல்லையோர சாலைகள் நிறுவனம் கட்டியுள்ளது
Posted On:
22 APR 2020 7:53PM by PIB Chennai
பஞ்சாபில் உள்ள சுற்றிலும் அந்நிய எல்லையைக் கொண்டுள்ள கசோவால் பகுதியை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்க, ரவி ஆற்றின் மீது நிரந்தர பாலத்தை, திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே கட்டி எல்லையோர சாலைகள் நிறுவனம் திறந்துள்ளது. 35 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு உள்ள இந்தப் பகுதி, குறிப்பிட்ட அளவு சுமையைத் தாங்கும் மிதக்கும் பாலம் மூலமாக இது வரை இணைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்துக்கு முன் இந்த மிதக்கும் பாலம் பிரித்தெடுக்கப்பட வேண்டும். இல்லையேல், ஆற்றின் வெள்ளப்பெருக்கில் இது அடித்துச் செல்லப்பட்டு விடும். சேத்தக் திட்டத்தின் 49 எல்லையோர பணிக்குழுவின் (BRTF) 141 வடிகால் பராமரிப்பு குழுவால் இந்த 484 மீட்டர் பாலம் கட்டப்பட்டது. அணுகும் வழிகளைத் தவிர்த்து ரூ.17.89 செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், ஒவ்வொன்றும் 30.25 மீட்டர் நீளமுள்ள 16 பகுதிகளைக் கொண்டது.
கையிருப்பில் உள்ள அனைத்து வளங்களும் திருப்பி விடப்பட்டு, தொலைதூரக் கரைக்கான அணுகு சாலை வேலை குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது. வைசாகிக்கு பிறகான முதல் திங்கட்கிழமை அன்று, இந்தப் பாலம் விவசாயிகளுக்காகத் திறந்து விடப்பட்டு, அவர்கள் தங்கள் விளை பொருள்களை டிராக்டர்களில் சந்தைகளுக்கு எடுத்து சென்றனர்.
***
(Release ID: 1617441)
Visitor Counter : 150