விவசாயத்துறை அமைச்சகம்
குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்புகள், எண்ணெய் வித்துக்களை ரபி பருவம் 2020இன் போது கொள்முதல் செய்வது, தற்போது 20 மாநிலங்களில் நடைபெறுகிறது.
Posted On:
22 APR 2020 8:32PM by PIB Chennai
பொது முடக்கக் காலத்தில் விவசாயிகளையும், வேளாண் நடவடிக்கைகளையும் கள அளவில் ஊக்கப்படுத்துவதற்காக, இந்திய அரசின் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை பற்றிய தற்போதைய தகவல்கள் வருமாறு:
1. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்புகள், எண்ணெய் வித்துக்களை ரபி பருவம் 2020இன் போது கொள்முதல் செய்வது 20 மாநிலங்களில் தற்போது நடைபெறுகிறது. 1,67,570.95 மெட்ரிக் டன் பருப்புகளும், 1,11,638.52 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும் ரூ.1313 கோடிக்கு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,74,284 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பழங்கள், காய்கறிகளின் விநியோகத்தையும், அவற்றின் விலைகளையும், மாநிலங்களுக்கிடையேயான அவற்றின் போக்குவரத்தையும் வட கிழக்குப் பிராந்தியத்துக்காக கண்காணித்திட ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
3. மகாராஷ்டிராவில் விளையும் இடங்களில் இருந்து இதர மாநிலங்களுக்கு வெங்காய விநியோகம் செய்வதற்காக மகாராஷ்டிர மண்டி மன்றத்துடன் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தொடர்பில் உள்ளது. தற்சமயம், தில்லி, ஹரியானா, பீகார், தமிழ்நாடு, பஞ்சாப், கொல்கத்தா, ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, குஜராத், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களுக்கு நாள்தோறும் சுமார் 300 சரக்கு வாகனங்களை நாசிக் மாவட்டத்தில் உள்ள வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள் தொடர்ந்து அனுப்புகின்றன.
4. மொத்த சந்தைகளை நெரிசல் இல்லாமல் ஆக்கவும் விநியோக சங்கிலிகளை ஊக்கப்படுத்தவும், அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தள்ளது. தேசிய வேளாண் சந்தையின் (e-NAM) இணையதளம் மேம்படுத்தப்பட்டு இரு புதிய அம்சங்கள், (அ) கிடங்கு சார்ந்த வியாபார பகுதி மற்றும் (ஆ) விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் (FPOs) பகுதி, சேர்க்கப்பட்டன. கிடங்குகள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு செய்யப்பட்டு நிகர்நிலை சந்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இருந்து விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, கிடங்கு சார்ந்த வியாபார பகுதி வழிவகை செய்கிறது. மண்டிகளுக்கு நேரில் வராமல், ஆன்லைன் ஏலம் மூலம் விற்பதற்காக, தங்கள் பொருள்களின் புகைப்படம்/தரம் பற்றிய தகவல்களை விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் சேகரிப்பு மையங்களில் இருந்து பதிவேற்றம் செய்ய, விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் பகுதி வழிவகை செய்கிறது. இது வரை 12 மாநிலங்களில் (பஞ்சாப், ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரேதசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்திர பிரதேசம் & ஜார்கண்ட்) உள்ள விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் வியாபாரத்தில் பங்குபெற்றுள்ளன.
5. ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் விவசாய வாயில் வணிகத்தை தேசிய வேளாண் சந்தையின் (e-NAM) இணையதளம் மூலம் தொடங்கி உள்ளன. இதன் மூலம், வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு செல்லாமலேயே, தங்கள் பொருள்களின் விவரங்களை படங்களுடன் ஆன்லைன் ஏலத்துக்காக விவசாயிகள் பதிவிடுகின்றனர். e-NAM மூலம் வணிகம் செய்வதற்காக, விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகளும் தங்கள் பொருள்களை பற்றிய விவரங்களை சேகரிப்பு மையங்களிலிருந்து பதிவிடுகின்றனர்.
6. சரக்கு போக்குவரத்து வசதி அளிப்போரை நவீனப்படுத்துதல் திட்டம் e-NAM தளத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. தங்கள் பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகளை கண்டறிந்து வேளாண் பொருள்களை மண்டியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விரைவில் எடுத்து செல்ல வணிகர்களுக்கு இது உதவுகிறது. 11.37 லட்சத்துக்கும் அதிகமான சரக்கு வாகனங்களும், 2.3 லட்சம் போக்குவரத்து நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன
*****
(Release ID: 1617420)
Visitor Counter : 241