பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தொடர்ச்சியாக ட்ரைபெட்-ன் ஆக்கப்பூர்வ முன்முயற்சிகள்

Posted On: 22 APR 2020 2:50PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள், மலைவாழ்ப் பகுதி கைவினைக் கலைஞர்கள் மற்றும் மலைப்பகுதி பொருள் சேகரிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் நாட்டில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் பிரிவினராக உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் மலைப் பகுதிகளில் பொருட்களை அறுவடை செய்ய இது மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுகிறது. மலைகளில் பொருட்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள். மலைவாழ் மக்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைபெட் (TRIFED) அமைப்பு, நீண்டகாலமாக முடக்கநிலை அமலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக, நடுத்தர காலத்துக்கு மற்றும் நீண்ட காலத்துக்குப் பலன்தரும் முன்முயற்சிகளை எடுத்துள்ளது. முன் எப்போதும் சந்தித்திராத இப்போதைய சூழ்நிலையில் மலைவாழ் மக்களுக்கு கூடுதல் ஆதரவு தரும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

  • வன தன் சமாஜிக் தூரி ஜக்ரூக்தா அபியான் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் என்.டி.எப்.பி. பொருட்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு கற்பித்தல் பணி இதில் மேற்கொள்ளப்படும். சமூக இடைவெளி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது, சுகாதாரமாக இருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை இரண்டு அடுக்குப் பயிற்சியின் மூலம் (பயிற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் சுய உதவிக் குழு பயிற்சி), இணையவழி பயிலரங்கு மற்றும் முகநூல் நேரடி ஒளிபரப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் கற்பிக்கப்படும்.
  • முகக்கவச உறைகள் அணிந்து மற்றும் சுகாதாரத்துக்கான பொருட்களின் (சோப்புகள், கிருமிநாசினிகள் போன்றவை) பயன்பாட்டுடன்  வனப் பொருட்களை சேகரித்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளது. தங்களது செயல்பாடுகளில் பாதுகாப்புடன் ஈடுபட இவை உதவிகரமாக இருக்கும்.
  • வன பொருட்களை சேகரிப்பதை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முடக்கநிலை அமலின் இரம்டாவது கட்டத்திற்கான வழிகாட்டுதலில், விலக்கு அளிக்கப்பட்ட விஷயங்களின் பட்டியலில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • எம்.எப்.பி. பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை திருத்தி அமைப்பதில் ட்ரைபெட் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் விவகாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சோதனையான காலக்கட்டத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தங்கள் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைப்பதை உறுதி செய்ய இது உதவியாக இருக்கும்.

மலைவாழ் மக்கள் விவகார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநிலங்களிலும் ஹாத் பஜார்கள் எனப்படும் தொடக்க நிலை சந்தைகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும், எடைபோடும் வசதிகளுடன் கொள்முதல் மையங்கள் அமைக்கவும், போக்குவரத்து வசதி, சாதாரண கிடங்கு வசதி, குளிர்பதன கிடங்கு வசதிகள் செய்வதற்கு ட்ரைபெட் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.


(Release ID: 1617099) Visitor Counter : 298