சுற்றுலா அமைச்சகம்
கொரோனா வைரஸ் பரவலால் 2020 அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஹோட்டல் / உணவகங்களை மூடுவது குறித்து சுற்றுலா அமைச்சகம் எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை.
Posted On:
22 APR 2020 2:01PM by PIB Chennai
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 அக்டோபர் 15ஆம் தேதி வரை ஹோட்டல்கள் / உணவகங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கும் ஒரு போலி கடிதம் சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சுற்றுலாத் துறையினரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது சுற்றுலா அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது, மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இது குறித்து PIBFactCheck இல் பின்வருமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
https://twitter.com/PIBFactCheck/status/1247754535818293248?s=20
இந்தப் போலித் தகவல் சுற்றறிக்கை குறித்து சுற்றுலா அமைச்சகம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் மறுப்புகளை வெளியிட்டுள்ளதுடன், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகாரும் அளித்தது. பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மையறியும் சோதனைப் பிரிவும் சில நாட்களுக்கு முன்பு மறுப்புகளை வெளியிட்டது, ஆனால் போலிச் செய்தி மீண்டும் பரப்பப்படுகிறது. இதுபோன்ற செய்திகளைப் புறக்கணிக்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
**************
(Release ID: 1617082)
Visitor Counter : 259
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam