உள்துறை அமைச்சகம்

மேற்குவங்கத்தில் ஊரடங்கு நடவடிக்கைகளை செயல்படுவது குறித்து பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடு செய்வது மற்றும் பரிசீலனை செய்வது குறித்த மத்திய குழுவினரின் பணிகளுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்று மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Posted On: 21 APR 2020 5:49PM by PIB Chennai

கோவிட்-19 நோய்க்கு எதிரான ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கு வங்க மாநிலத்தில செயல்படுத்தப்படுவது குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களில் உள்ள நிலைமைகள் குறித்து அங்கேயே மதிப்பீடு செய்வது மற்றும் செயல்பாட்டுப் பணிகளை பரிசீலனை செய்வது ஆகியவை குறித்து மத்திய குழுவினர் மேற்கொள்ளும் பணிகளுக்கு மேற்குவங்க அரசு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

கொல்கத்தாவிலும், ஜல்பாய்குரியிலும் உள்ள அமைச்சர அளவிலான மத்திய குழுவினருக்கு மாநில அரசும், உள்ளாட்சி அதிகாரிகளும், தேவையான ஒத்துழைப்பு தரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இக்குழுவினர், களத்தில் நிலைமை என்ன என்பதை மதிப்பீடு செய்வது ,சுகாதாரப் பணியாளர்களுடன் உரையாடுவது, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வது போன்றவற்றைச் செய்யவிடாமல் தடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளை செயல்படுத்துவதைத் தடுப்பதற்கு ஒப்பாகும் இது.. தே போல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறுவதாக உள்ளது.

 

மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் சென்று மதிப்பீடு செய்வதற்காகவும், ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு குழுக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 19 4 2020 அன்று அனுப்பப்பட்டன. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன (NDMA) அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், நோய் நிலைமைகளை சமாளிப்பதற்கு மாநில அரசு இவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

 

19 4 2020 தேதியிடப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் ணைக்கு இயைந்து, மேற்குவங்க அரசு நடக்க வேண்டும் என்றும், அமைச்சரவை குழுக்கள் (Inter-Ministerial Central Teams - IMCT), தங்களுக்கு இடப்பட்ட ஆணையின் படி தங்களது பொறுப்புகளை செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மேற்கு வங்க அரசு செய்ய வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.



(Release ID: 1617015) Visitor Counter : 210