புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

கோவிட்-19 பொது முடக்கத்தின் காரணமாக தடை ஏற்பட்டுள்ளதால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களை பொது முடக்கம் முடிந்தபின் 30 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி

Posted On: 21 APR 2020 3:11PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தினால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு காலநீட்டிப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.  பொது முடக்க காலம் முடிந்த பிறகு இயல்புநிலை திரும்புவதற்காக பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகான 30 நாட்கள் என கால நீட்டிப்பை புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி அமலாக்க முகமைகள் வழங்கலாம் என்று புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதற்கான ஆணையை அமைச்சகம் ஏப்ரல் 17ம் தேதி அன்று வழங்கியுள்ளது.  காலநீட்டிப்பில் பொது முடக்க காலத்தோடு அது முடிந்த பிறகான 30 நாட்களும் அடங்கும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் காலநீட்டிப்பு அனைவருக்கமான காலநீட்டிப்பாகும்.  எனவே தனித் தனியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவையில்லைபொது முடக்கம் காரணமாக காலநீட்டிப்பு மேற்கொள்வதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் கேட்க வேண்டியது இல்லை.

புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி அமலாக்க முகமைகள் அனைத்தும் கோவிட்-19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை எதிர்பாராத ஒப்பந்த நிறைவேற்றத் தாமதமாக கருதிக் கொள்ள வேண்டும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறைகள் (மாநிலங்களின் மின்சாரம் / எரிசக்தி துறைகளின் கீழ் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயலை மேற்கொண்டுள்ள முகமைகள் உள்ளிட்டவை) கோவிட்-19 காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை எதிர்பாராத ஒப்பந்த நிறைவேற்றத் தாமதம் என எடுத்துக் கொள்ளலாம் என அமைச்சகம் கூறியுள்ளது.  அத்தகைய ஊரடங்கின் காரணமாக பொருத்தமான காலநீட்டிப்புக்கான அனுமதி வழங்குவதையும் பரிசீலிக்கலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.



(Release ID: 1616832) Visitor Counter : 197