பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான போரில் இந்திய விமானப்படையின் ஆதரவு

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2020 7:13PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான போரில், தனது செயல்மிகு ஆதரவை இந்திய விமானப்படை தொடர்ந்து நாட்டுக்கு அளித்து வருகிறது.

16 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள இடங்களுக்கு மருத்துவ விநியோகங்களை இந்திய விமானப்படை வான்வழியாக செய்தது. இது வரை, தோராயமாக 450 டன்கள் மருத்துவ உபகரணங்களையும், ஆதரவுப் பொருள்களையும் இந்திய விமானப்படை எடுத்துச் சென்றுள்ளது.

தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, இந்திய விமானப்படை வீரர்களாலும் அவர்களது குடும்பத்தினராலும் 'ஆரோக்கிய சேது' செயலி பயன்படுத்தப்படுகிறது.

நாடு பெரும்தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்து தொற்றினைத் தோற்கடிக்கப் பாடுபட்டு வரும் வேளையில், எழக்கூடிய அனைத்து தேவைகளையும் பணித்திறனோடு பூர்த்தி செய்ய இந்திய விமானப்படை தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1616770) வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Kannada