புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சூரியசக்தியால் இயங்கும் சோலார் பிவி மின்தகடுகள் மற்றும் சோலார் பிவி மின்கலன்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.09.2020 வரை ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது: - புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE).

Posted On: 21 APR 2020 2:30PM by PIB Chennai

சூரியசக்தியால் இயங்கும் சோலார் பிவி சூரிய மின் தகடுகள் மற்றும் சோலார் பிவி மின்கலன்கள் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள், மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.09.2020 வரை ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.  இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தேதி, முன்னர் 31. 3. 2020 ஆக இருந்தது. கோவிட்-19 நோய் பரவல் காரணமாக இது, 30 செப்டம்பர் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய புதிய, புதுப்பிக்கப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சமீபத்தில் அலுவலக குறிப்பாணையை (office memorandum)  வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1616662


(Release ID: 1616744) Visitor Counter : 201