சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் முக்கிய அலுவலர் பட்டியல் குறித்த ஆன்லைன் தகவல் தொகுப்பை அரசு வெளியிட்டது

Posted On: 19 APR 2020 7:33PM by PIB Chennai

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதில் சேவையாற்றக் கூடிய டாக்டர்களின் தகவல் தொகுப்பை https://covidwarriors.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஆயுஷ் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர சுகாதாரத் துறை அலுவலர்கள், நேரு யுவ கேந்திரா, தேசிய மாணவர் படை,  பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம், முன்னாள் ராணுவத்தினர் தன்னார்வலர்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அளவில் இவர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தகவல்கள் அறிவிப்புப் பலகைப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அவ்வப்போது புதுப்பிக்கப்படும். கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அலுவலர் வளம் குறித்த தகவல்கள், முக்கியமான தேவையாக இருக்கும்.

இது குறித்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறையின். அமைச்சகச் செயலாளரும், மனிதவளம் குறித்த அதிகாரமளிக்கப்பட்ட குழு-4 இன் தலைவருமான திரு. அருண்குமார் பாண்டா, அலுவலர் நலன் மற்றும் பயிற்சித் துறை செயலாளர் டாக்டர் சி. சந்திரமௌலி ஆகியோர் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் கூட்டாகக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். சுகாதார அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பட்டியலின் மொத்தத் தொகுப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவில் உள்ள மனிதவளம் பற்றிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.  முன்னோடி அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கான தகவலும் அதில் உள்ளது.

இருக்கிற மனிதவளத்தைப் பயன்படுத்தி, முன்னோடி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், நெருக்கடி நிலையைக்  கையாளுதல் / அவசரத் திட்டங்களை உருவாக்குவதற்கு பல்வேறு துறையினருக்கு இந்தப் பட்டியல் உதவிகரமாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.


(Release ID: 1616344) Visitor Counter : 262