எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம் வகுத்துள்ள வரைவு மின்சாரச் சட்ட (திருத்த) மசோதா 2020 க்கு ஆலோசனைகளை வரவேற்கிறது

எரிசக்தி துறையில் முக்கிய சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய, 2003 மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு

Posted On: 18 APR 2020 6:12PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து, நிலைபெறச் செய்வதற்கு, கட்டுபடியான விலையில், தரமான மின்சார விநியோகம் அவசியமாகும். எரிசக்தி துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், எரிசக்தி அமைச்சகம் 2003-ம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது.  வரைவு மின்சாரச் சட்ட (திருத்த) மசோதா 2020 என்ற பெயரில், மின்சாரத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏப்ரல் 17-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகள், யோசனைகள் ஆகியவை  21 நாட்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1615781–ஐ தொடர்பு கொள்ளவும்.(Release ID: 1615982) Visitor Counter : 176