அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆரோக்கியமாக உள்ளவர்களை கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்க, நிலை மின்னியல் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் முகக்கவசங்கள்

Posted On: 18 APR 2020 6:19PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூரில் உள்ள நானோ மென்பொருள் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, முகக் கவசங்களைத் தயாரிப்பதற்கான புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளது. டிரிபோஇ மாஸ்க்  என்னும் பெயரிலான  இந்த முகக்கவசம் வெளியிலிருந்து மின்சாரத்தை எடுக்காமல், மின்னூட்டம் செய்து கொண்டு, தொற்றைத் தடுத்து நிறுத்தும் திறன் கொண்டதாகும்.

நிலை மின்னியல் அடிப்படையில், இந்தப் புதிய முகக்கவசத்தை டாக்டர். பிரலாய் சன்ட்ரா, டாக்டர். அசுதோஷ் சிங், பேராசிரியர்.யு. குல்கர்னி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். மின்சாரத்தைக் கடத்தாத இரண்டு அடுக்குகளை ஒன்றுடன் ஒன்று தேய்ப்பதால், உடனடியாக நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னூட்டம் உருவாகி, அது சிறிது நேரத்திற்கு தொடரும் வகையில் முகக்கவசம் பாதுகாக்கிறது. இந்த மின்புலத்தைப் பயன்படுத்தி வலிமையான முறையில் செயல்படும் மின்னூட்டம் தொற்றை அழிக்கக்கூடியதாகும்.

இந்த முகக்கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. மளிகைப் பொருட்களுக்கான பைகளில் பயன்படுத்தப்படும் நெய்யப்படாத பாலிபுரோபைலின் என்ற ஒருவகை பொருளின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், நைலான் துணியை ஒரு அடுக்காக வைத்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த நைலான் துணிக்குப் பதிலாக பழைய பட்டுப்புடவைகள் மற்றும் சால்வைகளில் உள்ள ஜரிகைகளைக் கத்தரித்தும் பயன்படுத்தலாம். இந்த அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது, வெளிப்புறத்தில் எதிர்மறை மின்னூட்டமும், நைலான் துணி மூலம் நேர்மறை மின்னூட்டமும் ஏற்படுகிறது. இது இரட்டைச் சுவர் பாதுகாப்பு போன்ற கவசமாகச் செயல்பட்டு, தொற்று உள்ளே நுழையாதவாறு தடுக்கும். இந்த முகக்கவசம் பொதுவாக எளிதில் கிடைக்கக்கூடிய துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், இதனை மற்ற துணிகளைப் போலக் கழுவி, மீண்டும் பயன்படுத்தலாம்



(Release ID: 1615981) Visitor Counter : 200