உள்துறை அமைச்சகம்
கோவிட் – 19 வைரஸ் பரவலால், 2020 மே 3ஆம் தேதி வரையில் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தற்போது வசிக்கும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு தூதரக சேவைகள்
प्रविष्टि तिथि:
17 APR 2020 8:58PM by PIB Chennai
இந்தியாவில் தற்போது சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு குடிமக்கள், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகங்கள் / வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்கள் ஆகியவற்றின் தூதகரகச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பரவலால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வந்து சிக்கிக் கொண்டுள்ளவர்கள் மற்றும் பயணங்களுக்கு இந்திய நிர்வாகங்களால் விதிக்கப்பட்ட தடைகளால் சிக்கி யுள்ளவர்கள் ஆகியோரில் 01.02.2020 (நள்ளிரவு) முதல் 03.05.2020 (நள்ளிரவு) வரையிலான காலத்தில் விசா முடிபவர்கள் அல்லது இந்த காலத்தில் காலாவதி ஆகிற வெளிநாட்டவர்களின் வழக்கமான விசா, இ-விசா அல்லது நிபந்தனைச் சீட்டு ஆகியவை 03.05.2020 வரையில் ‘கருணை’ அடிப்படையில் நீட்டிக்கப்படுகிறது. இதற்கு வெளிநாட்டினர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இதுபோன்று விண்ணப்பித்த வெளிநாட்டினர், நாட்டைவிட்டு வெளியேறும்போது, அதிகபட்சமாக 03.05.2020இல் இருந்து 14 நாட்கள் வரையில், அதாவது 17.05.2020 வரையில் அவர்களுக்கு கூடுதலாக தங்கிய காலத்துக்காக எந்த கூடுதல் வரியும் விதிக்கப்படாது.
(रिलीज़ आईडी: 1615667)
आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam